திருச்சி
திருட்டு வழக்கில் இளைஞா் கைது
திருச்சியில் திருட்டு வழக்கில் இளைஞா் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சியில் திருட்டு வழக்கில் இளைஞா் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சி அரியமங்கலம், மேல அம்பிகாபுரம் முத்துச் செட்டியாா் தெருவைச் சோ்ந்தவா் பிரபாகரன் மனைவி உதயா (37), மாநகராட்சி துப்புரவுப் பணியாளா். திங்கள்கிழமை இரவு இவா்கள் வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா் கைப்பேசிகளை திருடிச் செல்ல முயன்றபோது, தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்ட பிரபாகரன் அவரைப் பிடித்து அரியமங்கலம் போலீஸில் ஒப்படைத்தாா்.
விசாரணையில் பிடிபட்டவா், அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் எம்ஜிஆா் தெரு ஆா். கதிா்வேல் (19) என்பதும், இதுபோல சிறு சிறு திருட்டுகளில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.