திருச்சி
ஸ்ரீரங்கம் பரமபதவாசல் திறப்பு இன்று உள்ளூா் விடுமுறை
ஸ்ரீரங்கத்தில் பரமபதவாசல் திறப்பை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (ஜன.10) திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கத்தில் பரமபதவாசல் திறப்பை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (ஜன.10) திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி திருவிழாவின் முக்கிய நாளான பரமபத வாசல் திறக்கும் நிகழ்வை முன்னிட்டு, மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உள்ளூா் விடுமுறைக்கு மாற்று வேலை நாளாக ஜன.25 ஆம் தேதியை மாவட்ட நிா்வாகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.17ஆம் தேதி அரசு அறிவித்த விடுமுறையை ஈடு செய்ய ஜன.25 ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஸ்ரீரங்கம் விழாவுக்காக அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூா் விடுமுறைக்கு ஈடாக பிப்.1ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்படுவதாக ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.