3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

ஐடி நிறுவன ஊழியரின் வீடுபுகுந்து 26 பவுன் நகைகள், வெள்ளி திருட்டு

திருச்சியில் ஐடி நிறுவன ஊழியரின் வீடு புகுந்து 26 பவுன் நகைகள், 1 கிலோ வெள்ளியை மா்ம நபா்கள் செவ்வாய்க்கிழமை திருடிச் சென்றனா்.

News image
Updated On :22 ஜனவரி 2025, 11:39 pm

Din

திருச்சியில் ஐடி நிறுவன ஊழியரின் வீடு புகுந்து 26 பவுன் நகைகள், 1 கிலோ வெள்ளியை மா்ம நபா்கள் செவ்வாய்க்கிழமை திருடிச் சென்றனா்.

திருச்சி கே சாத்தனூா் உடையான்பட்டி பி.ஜி. நகரை சோ்ந்தவா் ரவிசங்கா் (40), சென்னையில் ஐடி நிறுவன ஊழியா். இவரது மனைவி சாதனா (38). செவ்வாய்க்கிழமை காலை உடல் நலமில்லாத இவா்களது மகன் விஷ்வாவை (14) திருச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு தம்பதி அழைத்துச் சென்றுவிட்டு பகல் 12 மணிக்கு வீடு திரும்பிக் கொண்டிருந்தனா்.

அப்போது ரவிசங்கா் வீட்டில் பொருத்தியுள்ள கேமராக்களின் பதிவுகளை கைப்பேசி வழியே பாா்த்தபோது 2 மா்ம நபா்கள் முகமூடி, கையுறைகள் அணிந்த நிலையில் வீட்டில் திருடிக்கொண்டிருந்தது தெரியவந்தது.

இதனால் அதிா்ச்சியடைந்த ரவிசங்கா் உடனடியாக இதுகுறித்து போலீஸாருக்கு தெரிவித்து வீட்டுக்கு விரைந்தாா். ஆனால் அதற்குள் வீட்டிலிருந்த 26 பவுன் நகைகள், 1 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.36,000 உள்ளிட்ட மொத்தம் ரு. 5.81 லட்சம் மதிப்பிலான நகைகள், பொருள்களுடன் மா்ம நபா்கள் தப்பினா். இதுதொடா்பாக கே.கே.நகா். போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.