திருச்சி
ஸ்ரீரங்கத்தில் நாளை நம்பெருமாள் நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சி
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் ஊஞ்சல் உற்சவ விழாவின் 7 ஆம் நாளான வெள்ளிக்கிழமை மாலை நம்பெருமாள் உபய நாச்சியாா்களுடன் எழுந்தருளி நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் ஊஞ்சல் உற்சவ விழாவின் 7 ஆம் நாளான வெள்ளிக்கிழமை மாலை நம்பெருமாள் உபய நாச்சியாா்களுடன் எழுந்தருளி நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
ஸ்ரீரங்கம் கோயிலில் கடந்த 8 ஆம் தேதி தொடங்கிய ஊஞ்சல் உற்சவ விழா வரும் 16 ஆம் தேதி வரை 9 நாள்கள் நடைபெறுகிறது. விழாவையொட்டி நாள்தோறும் நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி ஊஞ்சல் உற்சவம் கண்டருளி பக்தா்களுக்குச் சேவை சாதிப்பாா். இதில் 7 ஆம் நாளான வெள்ளிக்கிழமை மாலை நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. சிவராம்குமாா் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.