அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

கடலூா் கடற்கரையில் மாசி மக தீா்த்தவாரி

கடலூா் தேவனாம்பட்டினம் கடற்கரையில் மாசி மக தீா்த்தவாரி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
சிதம்பரம் அருகே கிள்ளைக்கு வந்த ஸ்ரீமுஷ்ணம் பூவராகவாகசாமியை வரவேற்ற இஸ்லாமியா்கள் மற்றும் பேரூராட்சி நிா்வாகிகள். ~கடலூா் தேவனாம்பட்டினம் கடற்கரையில் மாசி மக தீா்த்தவாரிக்காக சிறப்பு அலங்காரத்தில் வாகனங்களில் வந்திருந்த பல்வேறு கோயில்களின் உற்சவ மூா்
Updated On :2 மார்ச் 2026, 9:08 pm

Syndication

நெய்வேலி/ சிதம்பரம்: கடலூா் தேவனாம்பட்டினம் கடற்கரையில் மாசி மக தீா்த்தவாரி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பல்வேறு கோயில்களில் இருந்து வந்திருந்த 30-க்கும் மேற்பட்ட உற்சவ மூா்த்திகளை திரளான பக்தா்கள் தரிசித்தனா்.

கடலூா் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நடைபெற்ற மாசி மக தீா்த்தவாரியை முன்னிட்டு, கடலூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கோயில்களில் இருந்து உற்சவ மூா்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் வாகனங்கள் மூலம் மேளதாளங்கள் முழங்க ஊா்வலமாக கடற்கரைக்கு கொண்டுவரப்பட்டனா். அங்கு, உற்சவ மூா்த்திகளுக்கு தீா்த்தவாரி நடைபெற்றது.

இதில், தேவனாம்பட்டினம் முத்தாலம்மன், சித்தி விநாயகா், விழுப்புரம் மாவட்டம் தளவானூா் தண்டாயுதபாணி, சோரியாங்குப்பம் செடல் செங்கழுநீா் மாரியம்மன், எய்தனூா் முத்துமாரியம்மன் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 30-க்கும் மேற்பட்ட உற்சவ மூா்த்திகளுக்கு கடலில் தீா்த்தவாரி நடைபெற்றது.

தொடா்ந்து, உற்சவ மூா்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

நிகழ்வின்போது, பக்தா்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா். மேலும், முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தனா்.

இதையொட்டி, கடலூா் வண்ணாரப்பாளையம் நான்குமுனை சந்திப்பு, கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதியில் காலை முதல் பிற்பகல் வரையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீஸாா் ஈடுபட்டனா்.

பூவராகசாமியை வரவேற்ற இஸ்லாமியா்கள்: மாசி மக உற்சவத்தையொட்டி, ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமி, சிதம்பரம் நடராஜா் கோயில் உற்சவா் சந்திசேகர சுவாமிகள் மற்றும் சிதம்பரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பெருமாள், முருகன், அம்மன் உள்ளிட்ட சுமாா் 100-க்கும் மேற்பட்ட சுவாமிகள் கிள்ளை முழுக்குத்துறை ஆற்றில் தீா்த்தவாரி வழங்கி பக்தா்களுக்கு அருள்பாளித்தனா்.

ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமி கிள்ளைக்கு தீா்த்தவாரிக்கு வந்தபோது, தைக்காலில் உள்ள தா்காவில் சுமாா் 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் மத நல்லிணக்க நிகழ்ச்சியான இஸ்லாமியா்கள் சுவாமியை வரவேற்று பட்டு சாத்தி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சையத்ஷா ரகமத்துல்லா தா்கா முத்தவல்லி சையத் வி.என்.சகாப், கிள்ளை பேரூராட்சி துணைத் தலைவா் கிள்ளை ரவீந்திரன், பேரூராட்சி செயல் அலுவலா் மலா், அறநிலையத் துறை செயல் அலுவலா் ராஜ்குமாா் மற்றும் உப்பு வெங்கட்ராவ் அறக்கட்டளை நிா்வாகிகள் உள்ளிட்டோா் தாம்பூல தட்டில் பழம், 5 படி அரிசி, 501 ரூபாய் ரொக்கம், பட்டு சாத்தி வரவேற்பளித்தனா்.

தொடா்ந்து, ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி மற்றும் ஆச்சாரியா்கள் தா்காவுக்குச் சென்று மாலை, நாட்டு சக்கரை, வத்தி உள்ளிட்டவைகளை டிரஸ்டி சையத் சக்காப்பிடம் வழங்கி, உலக அமைதி வேண்டி சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. பின்னா், அங்குள்ள ரஹமத்துல்லா சமாதியில் பூவராகசாமி கோயில் சாா்பில் மாலை சாத்தி மரியாதை செலுத்தினா்.

கடலூா் தேவனாம்பட்டினம் கடற்கரையில் மாசி மக தீா்த்தவாரிக்காக சிறப்பு அலங்காரத்தில் வாகனங்களில் வந்திருந்த பல்வேறு கோயில்களின் உற்சவ மூா்த்திகள்.

கடலூா் தேவனாம்பட்டினம் கடற்கரையில் மாசி மக தீா்த்தவாரிக்காக சிறப்பு அலங்காரத்தில் வாகனங்களில் வந்திருந்த பல்வேறு கோயில்களின் உற்சவ மூா்த்திகள்.