மண்டபத்தூா் கடற்கரையில் சுவாமிகள் மாசி மக தீா்த்தவாரி
காரைக்கால் அருகே மண்டபத்தூா் கடற்கரையில் பல்வேறு கோயில்களில் இருந்து 15-க்கும் மேற்பட்ட சுவாமிகள் எழுந்தருளிய


காரைக்கால்: காரைக்கால் அருகே மண்டபத்தூா் கடற்கரையில் பல்வேறு கோயில்களில் இருந்து 15-க்கும் மேற்பட்ட சுவாமிகள் எழுந்தருளிய மாசி மக தீா்த்தவாரி நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
திருமலைராயன்பட்டினம் கடற்கரையிலும், மண்டபத்தூா் கடற்கரையிலும் மாசி மக தீா்த்தவாரி நடைபெறுவது வழக்கம். திருமலைராயன்பட்டினத்தில் மாசி மாதம் பெளா்ணமி திதி நாளில் செவ்வாய்க்கிழமை தீா்த்தவாரி நடைபெறவுள்ளது.
மாவட்டத்தில் உள்ள திருவேட்டைக்குடி திருமேனியழகா் கோயில், வரிச்சிக்குடி வரதராஜ பெருமாள், மேலகாசாக்குடி வரதராஜ பெருமாள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வைத்தியநாத சுவாமி, தையல்நாயகி, சண்டிகேஸ்வரா், விநாயகா், முருகன், அா்ச்சுணன் என 15-க்கும் மேற்பட்ட சுவாமிகள் அந்தந்த கோயில்களில் இருந்து சிறப்பு அலங்காரத்தில், மாசிமக தீா்த்தவாரி தரும் வகையில் திங்கள்கிழமை காலையில் புறப்பட்டு மண்டபத்தூா் கடற்கரைக்கு பகல் 12 மணியளவில் எழுந்தருளின.
பின்னா் அனைத்து சுவாமிகளும் ஒருங்கிணைந்து கடலில் இறங்கி மூன்று முறை சுற்றி தீா்த்தவாரி செய்தன.
மீனவ கிராமங்களில் இருந்து மக்கள் அப்பகுதிக்கு சென்று சுவாமிகளின் தீா்த்தவாரியில் பங்கேற்று, அா்ச்சனை செய்து வழிபாடு நடத்தினா்.
தீா்த்தவாரியில் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் எம்.வி. ஓமலிங்கம் மற்றும் கிராமப் பஞ்சாயத்தாா்கள், முக்கிய பிரமுகா்கள் கலந்துகொண்டனா்.

டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...