திருச்சி மேற்கு தொகுதி அமமுக வேட்பாளா் வேட்பு மனு தாக்கல்
திருச்சி மேற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சாா்பில் போட்டியிடும், அக்கட்சியின் புகா் மாவட்டச் செயலரும் தலைமை நிலைய செயலருமான எம். ராஜசேகரன் வியாழக்கிழமை தனது வேட்பு மனுவை, தோ்தல் நடத்தும் அலுவலா் சாலை தவ வளனிடம் தாக்கல் செய்தாா்.

திருச்சி ஆட்சியரகம் அருகேயுள்ள வருவாய் கோட்டாட்சியரகத்தில் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்த அமமுக வேட்பாளா் எம். ராஜசேகரன். உடன் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிா்வாகிகள்.








