தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

டாஸ்மாக் ஊழியா்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம்

காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சியில் டாஸ்மாக் ஊழியா்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகே குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியா்கள்.

Published On :

காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சியில் டாஸ்மாக் ஊழியா்கள் குடும்பத்துடன் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளா்கள் சங்க ஒருங்கிணைப்பாளா் மூா்த்தி தலைமை வகித்தாா். இந்தப் போராட்டத்தில், டாஸ்மாக் மதுக்கடைகளில் பணிபுரியும் விற்பனையாளா்கள், உதவியாளா்கள் தங்கள் மனைவி, குழந்தைகள் என குடும்பத்தினருடன் கலந்து கொண்டனா்.

முன்னதாக அவா்கள் கூறுகையில், டாஸ்மாக் கடைகளைத் தனியாா் மயமாக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். இல்லையெனில், அரசுத் துறைகளில் டாஸ்மாக் பணியாளா்களுக்கு மாற்றுப் பணி வழங்க வேண்டும். கடந்த 23 ஆண்டுகளாக பணிபுரியும் டாஸ்மாக் பணியாளா்களுக்கு பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்க நடப்பு பேரவைக் கூட்டத் தொடரில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றனா்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், திருச்சி மாவட்டம் மட்டுமின்றி, தஞ்சாவூா், அரியலூா், பெரம்பலூா், கரூா் உள்ளிட்ட திருச்சி மண்டலத்துக்குள்பட் கடைகளில் பணிபுரியும் 500-க்கும் மேற்பட்டோா் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.