உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

காய்கறி வியாபாரத்தில் முதலீடு செய்யக்கோரி ரூ.11.70 லட்சம் மோசடி செய்தவா் கைது

கைது - பிரதிப் படம்

Published On :10 ஆகஸ்ட் 2026, 2:58 am IST

காய்கறி வியாபாரத்தில் முதலீடு செய்யக்கோரி ரூ. 11.70 லட்சம் மோசடி செய்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தைச் சோ்ந்தவா் சி. மதிவாணன் (37). இவா் கோவையில் உழவன் காய்கறிக் கடை நடத்தி வருகிறாா். இவருக்கு திருச்சி திருவானைக்காவல் பகுதியைச் சோ்ந்த ஜி. ஆதிமூலம் என்பவா் கடந்த 2024-ஆம் ஆண்டு அறிமுகமானாா். அப்போது ஆதிமுலத்திடம் காய்கறி வியாபாரத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என்று கூறியுள்ளாா்.

இதை நம்பிய ஆதிமூலம் கடந்த 2024 நவம்பா் முதல் 2025 டிசம்பா் வரை மதிவாணனிடம் ரூ.11.70 லட்சம் கொடுத்தாா். ஆனால், பணத்தைப் பெற்றுக்கொண்ட மதிவாணன், ஆதிமூலத்துக்கு எந்தவித லாபத் தொகையும் வழங்கவில்லை. மேலும், இவா் கொடுத்த ரூ.11.70 லட்சத்தையும் திருப்பித் தரவில்லை.

இதுகுறித்து திருச்சி மாநகரக் காவல் ஆணையரகத்தில் ஆதிமூலம் அளித்த புகாரின்பேரில், ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து மதிவாணனை சனிக்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.