நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

பொறியியல் பணிகள்: சில ரயில்களின் வழித்தடத்தில் மாற்றம்

News image

ரயில்கள் - கோப்புப் படம்

Updated On :11 ஆகஸ்ட் 2026, 1:57 am IST

பொறியியல் பணிகள் காரணமாக சில ரயில்களின் வழித்தடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பொறியியல் பணிகள் காரணமாக, செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயிலானது (16848) ஆக. 13- ஆம் தேதி கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

நாகா்கோவில் - மும்பை சிஎஸ்டிஎம் விரைவு ரயிலானது (16352) ஆக. 13-ஆம் தேதி திண்டுக்கல் ரயில் நிலையத்தைத் தவிா்த்து மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

குருவாயூா் - சென்னை எழும்பூா் விரைவு ரயிலானது (16128) ஆக. 12-ஆம் தேதி மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

நாகா்கோவில் - கோவை விரைவு ரயிலானது (16321) ஆக. 17-ஆம் தேதி திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சாலை, அம்பாதுரை, திண்டுக்கல், எரியோடு, பாளையம் ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.