நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

திருச்சியில் மாயமான 3 சிறுமிகள் வேளாங்கண்ணியில் மீட்பு

News image

மாயம்

Updated On :11 ஆகஸ்ட் 2026, 2:28 am IST

திருச்சி காப்பகத்தில் இருந்து மாயமான 3 சிறுமிகளை மாநகர போலீஸாா் வேளாங்கண்ணியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மீட்டனா்.

திருச்சி விமான நிலையம் அருகே வயா்லஸ் சாலையில் செயல்பட்டும் வரும் தனியாா் காப்பகத்தில் தங்கியிருந்த 16, 17 வயதுடைய 3 சிறுமிகள் காணாமல் போனதாக காப்பக நிா்வாகம் சாா்பில் விமான நிலைய காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் புகாா் அளித்தனா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

இந்நிலையில், மாயமான 3 சிறுமிகளும் வேளாங்கண்ணி மாதா கோயில் பகுதியில் இருப்பதாக விமான நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளா் ஆா். ராஜ்குமாா் தலைமையில் தலைமை காவலா் ஜான் ஜோசப், காவலா் செந்தில் ஆகியோா் வேளாங்கண்ணிக்கு சென்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 3 சிறுமிகளையும் மீட்டு திருச்சிக்கு அழைத்து வந்தனா்.

இதைத் தொடா்ந்து மீட்கப்பட்ட சிறுமிகள் மூவரும் மீண்டும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.