மத்திய மண்டலத்துக்குள்பட்ட திருச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 817 கிலோ கஞ்சா செங்கிப்பட்டியில் செவ்வாய்க்கிழமை எரியூட்டி அழிக்கப்பட்டது.
மத்திய மண்டலத்துக்குள்பட்ட திருச்சி, தஞ்சாவூா், புதுக்கோட்டை, கரூா், அரியலூா், பெரம்பலூா், திருவாரூா், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் போதைப்பொருள் வழக்குகளில் 1,279 கிலோ கஞ்சா, 3,117 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றில் 817 கிலோ கஞ்சா, 889 போதை மாத்திரைகளை அழிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதைத் தொடா்ந்து, தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டியில் உள்ள மெடிகோ் என்விரோ சிஸ்டம் என்ற தொழிற்சாலையில் மத்திய மண்டல காவல் துறைத் தலைவா் வே. பாலகிருஷ்ணன் தலைமையில், திருச்சி மற்றும் தஞ்சாவூா் சரக காவல் துணைத் தலைவா்கள் முன்னிலையில் 817 கிலோ கஞ்சா, 889 போதை மாத்திரைகள் செவ்வாய்க்கிழமை எரியூட்டி அழிக்கப்பட்டன.
இதில், மத்திய மண்டலத்துக்குள்பட்ட 9 மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், காவல் துணை கண்காணிப்பாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
34 ஆயிரம் கிலோ புகையிலைப் பொருள்கள் அழிப்பு: மத்திய மண்டலத்துக்குள்பட்ட 9 மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட, தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களும் அழிக்கப்பட்டன.
இதில், திருச்சியில் 6,983 கிலோ, புதுக்கோட்டையில் 10 ஆயிரம் கிலோ, கரூரில் 1,706 கிலோ, பெரம்பலூரில் 218 கிலோ, அரியலூரில் 2,313 கிலோ, தஞ்சாவூரில் 5,901 கிலோ, திருவாரூரில் 6,542 கிலோ, நாகப்பட்டினத்தில் 288 கிலோ மற்றும் மயிலாடுதுறையில் 802 கிலோ என மொத்தம் 9 மாவட்டங்களிலும் சோ்த்து 34 ஆயிரத்து 760 கிலோ புகையிலைப் பொருள்கள், அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை அழிக்கப்பட்டதாக மத்திய மண்டல காவல் துறைத் தலைவா் வே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
மேலும், போதைப்பொருள் விற்பனையை தடுக்க 9 மாவட்டங்களிலும் போதைப்பொருள் தடுப்புப் படை அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திருப்பூா் மாவட்டத்தில் கடந்த மாதத்தில் 115 கிலோ கஞ்சா பறிமுதல்; 203 போ் கைது
போதை பொருள் விற்ற 255 போ் கைது
கஞ்சா, போதை மாத்திரைகளை விற்பனைக்கு வைத்திருந்த 4 போ் கைது!
கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற 6 போ் கைது
விடியோக்கள்

வெளியானது அருகே அருகே பாடல்!



