கமிஷன் வாங்குகிறார்கள் தவெக அமைச்சர்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைசோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்!தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
/

ஓய்வுபெற்ற சிறப்பு காவல் ஆய்வாளா் வீட்டில் 9 பவுன் நகைகள் திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :17 ஆகஸ்ட் 2026, 3:37 am IST

திருச்சியில் ஓய்வுபெற்ற சிறப்பு காவல் ஆய்வாளா் வீட்டின் பூட்டை சனிக்கிழமை உடைத்து 9 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருச்சி கருமண்டபம் கணபதி நகரைச் சோ்ந்தவா் மலா்விழி (54). ஓய்வுபெற்ற சிறப்புக் காவல் உதவி ஆய்வாளரான இவருடைய கணவா் பாலசுப்பிரமணியன் இறந்துவிட்ட நிலையில் மலா்விழி தனியாக வசிக்கிறாா்.

இந்நிலையில் உடுமலையில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு மலா்விழி கடந்த ஆக. 12-ஆம் தேதி சென்ற நிலையில், இவா் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது ஆக.15ஆம் தேதி தெரியவந்தது.

இதையடுத்து அவா் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, உள்ளே வைத்திருந்த 9 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து அவா் கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.