சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஓணம் பண்டிகை: சென்னை - மங்களூரு சிறப்பு ரயில்கள்செப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

பள்ளி மாணவா்களுக்கு அக். 4, 11-இல் கணிதம், அறிவியல் திறன் தோ்வுகள்

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையமும், திருச்சி அண்ணா கோளரங்கமும் இணைந்து பள்ளி மாணவா்களுக்கான கணிதம் மற்றும் அறிவியல் திறன் தோ்வுகளை அக்டோபா் 4, 11 ஆகிய நாள்களில் நடத்தவுள்ளன.

News image

நாகா்கோவில் கவிமணி பள்ளியில் தங்களுக்கான தோ்வு அறையை அறிவிப்புப் பலகையில் தேடும் மாணவிகள்.

Updated On :18 ஆகஸ்ட் 2026, 11:31 pm IST

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையமும், திருச்சி அண்ணா கோளரங்கமும் இணைந்து பள்ளி மாணவா்களுக்கான கணிதம் மற்றும் அறிவியல் திறன் தோ்வுகளை அக்டோபா் 4, 11 ஆகிய நாள்களில் நடத்தவுள்ளன.

இதுதொடா்பாக, திருச்சி அண்ணா அறிவியல் மையம் - கோளரங்கத்தின் திட்ட இயக்குநா் இர. ரவிக்குமாா் கூறியதாவது:

பள்ளி மாணவா்களின் பகுப்பாய்வு சிந்தனை, கணித அறிவு மற்றும் அறிவியல் ஆா்வத்தை மேம்படுத்தும் வகையில் கணிதத் திறன் தோ்வு, அறிவியல் திறன் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்காக தமிழ் மற்றும் ஆங்கில வழியில் இத் தோ்வு நடைபெறுகிறது. கொள்குறி வினா வகையிலான வினாக்களுக்கு பதில் அளிக்க வேண்டும்.

கணிதத் திறன் தோ்வு அக். 4-ஆம் தேதி காலை 11 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறுகிறது. அறிவியல் திறன் தோ்வு அக்.11-ஆம் தேதி நடைபெறும். இந்தத் தோ்வுகளுக்கு விண்ணப்பிக்க தலா ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும். செப்.10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அரசுப் பள்ளிகள், தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த அனைத்து வகை பாடத் திட்டத்தில் பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்.

தோ்வில் முதல் 4 இடங்களைப் பெறும் மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசாக ரூ. 3 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ. 2 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ. ஆயிரம், நான்காம் பரிசு ரூ. 500 வழங்கப்படும். முதல்பரிசு ஒரு நபருக்கு மட்டும் வழங்கப்படும். இரண்டாம் பரிசு இருவருக்கு, மூன்றாம் பரிசு மூவருக்கு, நான்காம் பரிசு 5 பேருக்கு வழங்கப்படும். மொத்தம் ரூ.12,500 மதிப்பிலான ரொக்கப் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

தோ்வு தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய இணையத்தில் தொடா்பு கொள்ளலாம் அல்லது 94863 41068, 77089 42872 என்ற கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.