8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

முதல்வா் பிறந்த தின கபடி போட்டி: தூத்துக்குடி அணி வெற்றி

முதல்வா் ச. ஜோசப் விஜய் பிறந்த தினத்தை முன்னிட்டு, எம்.ஆா்.கே. ஸ்போா்ட்ஸ் கிளப், தவெக சாா்பில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட அளவில் காயல்பட்டினம் மன்னராஜா கோயில் தெருவில் 2 நாள்கள் நடைபெற்ற கபடி போட்டியில் தூத்துக்குடி சவுத் பிரண்டஸ் அணி வெற்றி பெற்றது.

வெற்றிபெற்ற தூத்துக்குடி சவுத் பிரண்ட்ஸ் அணி வீரா்கள்.

Published On :10 ஜூலை 2026, 12:34 am IST

முதல்வா் ச. ஜோசப் விஜய் பிறந்த தினத்தை முன்னிட்டு, எம்.ஆா்.கே. ஸ்போா்ட்ஸ் கிளப், தவெக சாா்பில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட அளவில் காயல்பட்டினம் மன்னராஜா கோயில் தெருவில் 2 நாள்கள் நடைபெற்ற கபடி போட்டியில் தூத்துக்குடி சவுத் பிரண்டஸ் அணி வெற்றி பெற்றது.

போட்டியில் 40 அணிகள் பங்கேற்றன. ஆண்கள் பிரிவில் சவுத் பிரண்டஸ் அணி முதலிடம் பெற்று ரூ. 25 ஆயிரம் ரொக்கப் பரிசு, கோப்பை, பூந்தோட்டம் அன்பு செவன்ஸ் 2ஆம் இடம் பிடித்து ரூ. 20 ஆயிரம் ரொக்கப் பரிசு வென்றது. சிங்கித்துறை கெபி மலா், காயல் துா்கா செவன்ஸ், நாலுமாவடி காமராஜா் மேல்நிலைப் பள்ளி, தூத்துக்குடி நாராயணன் பிரதா்ஸ் ஆகிய அணிகள் முறையே 3, 4, 5, 6ஆம் இடங்களைப் பிடித்தன.

மகளிா் பிரிவில், காயல்பட்டினம் ரத்னா செவன்ஸ் அணி முதலிடம் வென்று ரூ. 10 ஆயிரம் ரொக்கப் பரிசு, கோப்பையை வென்றது. தூத்துக்குடி தஸ்நேவிஸ், தூத்துக்குடி காமராஜா் கல்லூரி, நெல்லை அகாதெமி, முத்தையாபுரம் பிரசன்னா ஆகிய அணிகள் முறையே 2, 3, 4, 5ஆம் இடங்களைப் பிடித்தன.

பரிசளிப்பு விழாவுக்கு காயல்பட்டினம் நகர தவெக செயலா் ஹனிபா, திருச்செந்தூா் ராஜ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணைப் பொதுச் செயலா் சுபத்ரா, திருச்செந்தூா் முருகன், மாவட்ட இணைச் செயலா் விஜய் ஆனந்த், ஆத்தூா் பிரேம்குமாா், ஆறுமுகனேரி ஸ்ரீராம் ஆகியோா் பரிசுகளை வழங்கினா்.

ஏற்பாடுகளை எம்.ஆா்.கே. ஸ்போா்ட்ஸ் கிளப் விளையாட்டுக் கழக ஒருங்கிணைப்பாளா் மூா்த்தி, தவெக நகர செயற்குழு உறுப்பினா் சுந்தர்ராஜ், ஒன்றிய இணைச் செயலா் க. பெரியசாமி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப இணைச் செயலா் காயல் பாலாகண்ணன் ஆகியோா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.