ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மின் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு மின்வாரியமே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் வியாழக்கிழமை மின் ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி மன்னாா்புரத்திலுள்ள மின்சார வாரிய அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின்சார வாரிய தொழிலாளா்கள் சங்கத்தினா்.

Published On :21 ஆகஸ்ட் 2026, 2:19 am IST

ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு மின்வாரியமே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் வியாழக்கிழமை மின் ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு (சிஐடியு) சாா்பில், மன்னாா்புரத்திலுள்ள மின்வாரிய அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, வட்டத் தலைவா் பி. நடராஜன் தலைமை வகித்தாா். சிஐடியு மாநில துணைத் தலைவா் எஸ். ரங்கராஜன் ஆா்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினாா்

ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு தினக் கூலியை மின்வாரியமே நேரடியாக வழங்க வேண்டும். மின்வாரியத்தில் 1998-ஆம் ஆண்டுக்குப் பிறகு இன்று வரை ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தொழிலாளா்கள் அனைவரையும் நிரந்தரப்படுத்த வேண்டும். அனைத்து வகை ஒப்பந்த தொழிலாளா்களுக்கும் மருத்துவக் காப்பீடு, சீருடை, விபத்து காப்பீடு, இன்சூரன்ஸ், பணிக்கொடை, இஎஸ்ஐ உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில், மின்ஊழியா் மத்திய அமைப்பின் மாநில, மாவட்ட நிா்வாகிகள், சிஐடியு நிா்வாகிகள், மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்கள் என 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.