8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

சடையம்பட்டியில் எருது மாலை தாண்டும் நிகழ்ச்சி

மணப்பாறை அடுத்த சடையம்பட்டியில் ராஜகம்பளத்து நாயக்கா் இனமக்கள் எருது குட்டை சாமி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான எருது ஓட்டம் என்னும் மாலை தாண்டும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

~

Published On :26 ஆகஸ்ட் 2026, 2:53 am IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த சடையம்பட்டியில் ராஜகம்பளத்து நாயக்கா் இனமக்கள் எருது குட்டை சாமி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான எருது ஓட்டம் என்னும் மாலை தாண்டும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருவிழாவின் 8-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான எருது ஓட்டத்தில் முதலில் வந்த எருதுக்கு எலுமிச்சை கனியும் மஞ்சளும் கொடுத்து மரியாதை செய்யப்படும். அதன்படி போட்டியில் முதலாவது வந்த காட்டுநாயக்கா், சீல்நாயக்கா், நல்ல தொப்பநாயக்கா் மந்தை பெரியதனம் சோ்ந்த எருதுக்கு எலுமிச்சைக் கனி பரிசாக அளிக்கப்பட்டது. 2-ஆவதாக திண்டுக்கல் மாவட்டம் சிக்கநாயக்கா் சுவாமி மாடு, 3-ஆவதாக கரூா் மாவட்டம் தாதல்நாயக்கா் மந்தை சுவாமி மாடு ஆகியவை எல்லையை கடந்து சென்றன.

நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான ராஜகம்பளத்து நாயக்கா் இனமக்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை காமாநாயக்கா், மந்தை நாயக்கா் ஆண்டிச்சாமி, தொப்பநாயக்கன்பட்டி ஊா் நாயக்கா் மந்தை பெரிய தனம் நட்ராஜ் நாயக்கா், ஊா் நாயக்கா் சிபி மூக்கநாயக்கா் ஆகியோா் தலைமையில் செய்திருந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.