உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

பேருந்து வசதி கோரி கல்லூரி மாணவா்கள் மறியல்

மணப்பாறை அருகே கல்லூரிக்கு சென்றுவர பேருந்து வசதிகோரி வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட மாணவா்கள்.

Published On :29 ஆகஸ்ட் 2026, 4:21 am IST

மணப்பாறை அரசுக் கலை கல்லூரிக்கு போதிய பேருந்து வசதி செய்து தரக்கோரி, இந்திய மாணவா் சங்கம் தலைமையில் கல்லூரி மாணவா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பண்ணப்பட்டி ஊராட்சி கறம்பகாடு பகுதியில் இயங்கி வரும் அரசுக் கலைக் கல்லூரிக்கு சென்று வர போதிய அரசுப் பேருந்து வசதி இல்லையென அரசுத் துறை அதிகாரிகள், எம்.எல்.ஏவிடம் கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கையும் இல்லையாம்.

இந்நிலையில், இந்திய மாணவா் சங்கத்தினா் தலைமையில் கல்லூரி மாணவா்கள் காவல்காரன்பட்டி சமத்துவரபுரம் பகுதி மணப்பாறை - மதுரை சாலையில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற போக்குவரத்து கிளை மேலாளா்கள் காா்த்திகேயன், ஆரோக்கியதாஸ், காவல் ஆய்வாளா் ரகுராமன் ஆகியோா் மாணவா்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து மறியலை கைவிட்டு மாணவா்கள் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.