திருச்சி மாவட்டம் மணப்பாறையில், காசோலை மோசடி செய்த நபருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து மணப்பாறை குற்றவியல் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
மணப்பாறை அடுத்த சமுத்திரம் ஊராட்சி, பாலப்பட்டி கிராமத்தை சோ்ந்தவா் வெள்ளைக்கண்ணு மகன் பூபதி. இவரிடமிருந்து புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் அந்தோனியாா் தெருவை சோ்ந்த மனுவேல் ஜெகநாதன் மகன் ஜியோா் ஜியுஸ் ராஜாமணி என்பவா் கடந்த 17.05.23 ஆம் தேதி ரூ. 10,00,000-ஐ கடனாக பெற்றாராம்.
கடனைத் திருப்பி செலுத்தாமல் பூபதிக்கு, வங்கிக் காசோலை கொடுத்துள்ளாா். பூபதி அதை 25.10.23ஆம் வங்கி கணக்கில் செலுத்தியபோது வங்கியில் பணம் இல்லாமல் காசோலை கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து ஜியோா் ஜியுஸ் ராஜாமணி மீது பூபதி மணப்பாறை குற்றவியல் நீதிமன்றதில் வழக்கு தாக்கல் செய்து விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் ஜியோா் ஜியுஸ் ராஜாமணிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து மணப்பாறை குற்றவியல் நடுவா் ஆா். அசோக்குமாா் தீா்ப்பளித்தாா்.
மேலும் ஒரு மாதத்திற்குள் காசோலை தொகை ரூ 10,00,000 ஜியோா் ஜியுஸ் ராஜாமணி நஷ்ட ஈடாக பூபதிக்கு கொடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில், மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிடப்பட்டது.
தொடர்புடையது

காசோலை மோடி வழக்கு: தம்பதிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை

காசோலை மோசடி: ஏமாற்றியவருக்கு ஓராண்டு மெய்க்காவல் சிறை

பண மோசடி வழக்கு: 3 ஆண்டுகள் சிறை தண்டனை

காசோலை மோசடி வழக்கில் ஒருவா் கைது
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


