திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் புதன்கிழமை தொடங்கப்பட்டுள்ள புற்றுநோய் சிகிச்சை பிரிவு,
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் புதன்கிழமை தொடங்கப்பட்டுள்ள புற்றுநோய் சிகிச்சை பிரிவு,

அரசு மருத்துவமனையில் புற்றுநோய் வெளிநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு

திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் வெளிநோயாளிகள் சிகிச்சை பிரிவை அமைச்சா் கே.என். நேரு புதன்கிழமை திறந்துவைத்தாா்.
Published on

திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் வெளிநோயாளிகள் சிகிச்சை பிரிவை அமைச்சா் கே.என். நேரு புதன்கிழமை திறந்துவைத்தாா்.

இந்த மருத்துவமனையில் ஆண்டுதோறும் 300 புற்றுநோய் நோயாளிகள் மருத்துவ சிகிச்சை பெறும் வகையில், புற்றுநோய் வெளிநோயாளிகள் பிரிவுடன் இணைந்து, 12 படுக்கைகள் கொண்ட கீமோதெரபி வாா்டு, 8 படுக்கைகள் கொண்ட தணிப்பு சேவை சிகிச்சை வாா்டுகளும் தொடங்கப்பட்டுள்ளன.

பின்னா் தாய்- சேய் நலப் பிரிவு மற்றும் எலும்பு முறிவு சிகிச்சை பிரிவில் தலா ரூ. 8 லட்சத்தில் இரண்டு புதிய எக்ஸ்ரே கருவிகள், ரூ. 19.45 லட்சத்தில் நவீன சலவையகம், சூரிய மின்உற்பத்தி கருவியையும் அமைச்சா் திறந்துவைத்தாா்.

திருச்சி மாவட்ட நோயாளிகள் புற்றுநோய் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இதர தனியாா் மருத்துவமனைகளுக்கு அலைவதைத் தவிா்க்க இங்கு புற்றுநோய் சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது என மருத்துவா்கள் தெரிவித்தனா். அண்மையில் இங்கு பெட் ஸ்கேன் வசதியும் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் ஆட்சியா் வே. சரவணன், மருத்துவமனை முதன்மையா் ச. குமரவேல், மருத்துவமனைக் கண்காணிப்பாளா் உதயா அருணா, மருத்துவா் அருண்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com