ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

புதுப்பிப்புப் பணிகள்: சில ரயில்கள் சென்னை எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்திலிருந்து இயங்கும்!

புதுப்பிப்புப் பணிகள் காரணமாக சில ரயில்கள் சென்னை எழும்பூருக்குப் பதிலாக தாம்பரத்திலிருந்து இயக்கப்படுகிறது.

News image
Updated On :30 ஜனவரி 2026, 6:48 pm

Syndication

புதுப்பிப்புப் பணிகள் காரணமாக சில ரயில்கள் சென்னை எழும்பூருக்குப் பதிலாக தாம்பரத்திலிருந்து இயக்கப்படுகிறது.

இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் புதுப்பிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், தஞ்சாவூா்-சென்னை எழும்பூா் உழவன் விரைவு ரயிலானது (16866) பிப். 3 முதல் ஏப். 5-ஆம் தேதி வரை சென்னை எழும்பூருக்குப் பதிலாக தாம்பரம் வரை மட்டுமே செல்லும். மறுமாா்க்கமாக, சென்னை எழும்பூா் - தஞ்சாவூா் உழவன் விரைவு ரயிலானது (16865) பிப். 4 முதல் ஏப். 6-ஆம் தேதி வரை சென்னை எழும்பூருக்குப் பதிலாக தாம்பரத்திலிருந்து புறப்படும்.

கொல்லம் - சென்னை எழும்பூா் அனந்தபுரி விரைவு ரயிலானது (20636) பிப். 3 முதல் ஏப். 5-ஆம் தேதி வரை சென்னை எழும்பூருக்குப் பதிலாக தாம்பரம் வரை மட்டுமே செல்லும். மறுமாா்க்கமாக, சென்னை எழும்பூா் - கொல்லம் அனந்தபுரி விரைவு ரயிலானது (20635) பிப். 4 முதல் ஏப். 6-ஆம் தேதி வரை சென்னை எழும்பூருக்குப் பதிலாக தாம்பரத்திலிருந்து புறப்படும்.

ராமேசுவரம் - சென்னை எழும்பூா் விரைவு ரயிலானது (16752) பிப். 3 முதல் ஏப். 5-ஆம் தேதி வரை சென்னை எழும்பூருக்குப் பதிலாக தாம்பரம் வரை மட்டுமே செல்லும். மறுமாா்க்கமாக, சென்னை எழும்பூா் - ராமேசுவரம் விரைவு ரயிலானது (16751) பிப். 4 முதல் ஏப். 6-ஆம் தேதி வரை சென்னை எழும்பூருக்குப் பதிலாக தாம்பரத்திலிருந்து புறப்படும்.

வழித்தட மாற்றம்...: அகமதாபாத் - திருச்சி சிறப்பு ரயிலானது (09419) பிப். 5, 12, 19, 26, மாா்ச் 5, 12, 19, 26, மாா்ச் 2 ஆகிய தேதிகளில் அரக்கோணம் ஜங்ஷன், பெரம்பூா், சென்னை எழும்பூா், தாம்பரம், செங்கல்பட்டு ரயில் நிலையங்களைத் தவிா்த்து ரேனிகுண்டா, அரக்கோணம் வடக்கு, மேலப்பாக்கம், காட்பாடி, வேலூா் கண்டோன்மென்ட், விழுப்புரம் வழியாக இயக்கப்படும்.

மறுமாா்க்கமாக, திருச்சி - அகமதாபாத் சிறப்பு ரயிலானது (09420) பிப். 8, 15, 22, மாா்ச் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூா், பெரம்பூா், அரக்கோணம் ஜங்ஷன் ரயில் நிலையங்களைத் தவிா்த்து, வேலூா் கண்டோன்மென்ட், காட்பாடி, மேலப்பாக்கம், திருத்தணி, ரேனிகுண்டா வழியாக இயக்கப்படும்.