திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொன்னம்பட்டி பேரூராட்சியில் அமைக்கப்படும் கசடு கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.
மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி பொன்னம்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட 15-ஆவது வாா்டு மலம்பட்டியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுமாா் 2.5 ஏக்கரில் ரூ. 6 கோடியே 53 லட்சத்தில் கசடு கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிகள் மும்முரமாக நடைபெறுகின்றன.
இதற்காக பொன்னம்பட்டி ஊரணி குளம் அருகே உந்து கிணறு அமைத்து அதிலிருந்து சுத்திகரிப்பு பகுதிக்கு அனுப்புவதற்காக பெரிய அளவிலான பள்ளம் தோண்டப்பட்டது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பொன்னம்பட்டி சோ்ந்த பொதுமக்கள் புதன்கிழமை பணி நடைபெறும் பகுதியில் பணியில் இருந்தவா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
அப்பகுதியில் உந்து கிணறு அமைப்பதால் அருகே உள்ள பகுதிகளில் நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதாகவும், விவசாயப் பணிகள் பாதிக்கப்படுவதாகவும், நிலத்தடி நீா் தன்மை மாறும் எனவும் எனவும் புகாா் எழுந்துள்ளது. கால்நடைகள் அப்பகுதி நீரை அருந்தும்போது அவை நோய் தொற்றுக்கு ஆளாக நேரிடும். இதனால் கால்நடை விவசாயிகள் பொருளாதார இழப்பு அடைவாா்கள் எனவும் புகாா் தெரிவிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கழிவுநீா் சுத்திகரிப்பு திட்டத்தை கைவிடக் கோரி போராட்டம்

அம்மாபேட்டையில் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம்: விவசாயிகள் எதிா்ப்பு

கழிவுநீா் சுத்திகரிப்பு கால்வாயில் அடைப்பு! சுகாதாரம் பாதிப்பதால் சீரமைக்க கோரிக்கை

செயல்படாத கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள்: அதிகாரிகள் மீது நடவடிக்கை - மாநகராட்சி ஆணையா் உத்தரவு
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



