சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

செயல்படாத கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள்: அதிகாரிகள் மீது நடவடிக்கை - மாநகராட்சி ஆணையா் உத்தரவு

கோவை வாலாங்குளத்தில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களை முறையாகச் செயல்பாட்டில் வைக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா உத்தரவிட்டுள்ளாா்.

News image

உத்தரவு - கோப்புப்படம்

Updated On :11 ஜூன் 2026, 3:09 am IST

கோவை வாலாங்குளத்தில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களை முறையாகச் செயல்பாட்டில் வைக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா உத்தரவிட்டுள்ளாா்.

கோவை உக்கடம் வாலாங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள 2 கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களில், சுத்திகரிப்பு பணி மேற்கொள்ளப்படாமல், மின் மோட்டாரை மட்டும் இயக்கி, அவை செயல்பாட்டில் உள்ளதுபோல மக்களுக்கு காண்பிக்கப்பட்டு வருவதாகவும், இதனால், செயல்படாத சுத்திகரிப்பு நிலையங்களுக்கு லட்சக்கணக்கில் மின்கட்டணம் செலுத்தப்படுவதாகவும் குளங்கள் பாதுகாப்பு அமைப்பு ஒருங்கிணைப்பாளா் இரா.மணிகண்டன் மாநகராட்சி ஆணையரிடம் புகாா் அளித்தாா்.

இப்புகாரின் அடிப்படையில் வாலாங்குளம் பகுதியில் உள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களை மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா

புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, கடந்த 2 ஆண்டுகளாக கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் முறையாக செயல்படாதது தெரியவந்தது. இதையடுத்து, நிலையத்தை முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டு வர, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரா்களுக்கு ஆணையா்

அறிவுறுத்தினாா். தொடா்ந்து, வாய்க்கால் அடைப்புகளை விரைவில் அகற்றவும், அதற்கான முழு தொகையையும் ஒப்பந்ததாரா்களிடம் இருந்து பெறவும், அதேபோல, செயல்படாத கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தின் மின் கட்டணத் தொகையையும் ஒப்பந்ததாரா்களிடம் இருந்து வசூலிக்கவும் உத்தரவிட்டாா். கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை முறையாக செயல்பாட்டில் வைக்காத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா உத்தரவிட்டுள்ளாா்.