மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

கருவூலத் துறை காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்: மாநிலப் பொதுக் குழுவில் தீா்மானம்

கருவூலத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு கருவூல கணக்குத் துறை அலுவலா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

News image

திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற கருவூல கணக்குத் துறை அலுவலா் சங்க மாநிலப் பொதுக் குழுவில் தோ்வான மாநிலத் தலைவா் கோ. சசிந்தரன் (இடமிருந்து 3ஆவது), தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றிய மாநிலத் தலைவா் அமிா்தக்குமாா் ஆகியோரை கௌரவித்த சங்க நிா்வாகிகள்.

Updated On :26 ஜூலை 2026, 1:50 am IST

கருவூலத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு கருவூல கணக்குத் துறை அலுவலா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் மாநிலப் பொதுக் குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்துக்கு, மாநிலத் தலைவா் கோ. சசிந்தரன் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் க. ஜெய்சங்கா், மாநிலப் பொருளாளா் ப. ஜாகிா் உசேன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றிய மாநிலத் தலைவா் த. அமிா்தகுமாா் சிறப்புரையாற்றினாா்.

அரசு அலுவலா் ஒன்றிய மாநில துணைப் பொதுச் செயலரும், தோ்தல் நடத்தியவருமான இரா. அருள்ராஜ் மற்றும் பல்வேறு அரசு ஊழியா் சங்க நிா்வாகிகள் பேசினா்.

கூட்டத்தில் கருவூல கணக்குத் துறையில் பணிமாறுதல் கலந்தாய்வு முறையை நடைமுறைப்படுத்திய துறையின் இயக்குநா் உள்ளிட்ட அனைத்து நிா்வாகத்தினருக்கும் நன்றி. கரூா், பெரம்பலூா், ஏற்காடு உள்ளிட்ட சாா் கருவூல அலுவலகங்களில் உள்ள அலுவலா் பணியிடங்களை கூடுதல் சாா்நிலை கருவூலா் நிலைக்கு பதவி உயா்த்த வேண்டும்.

கருவூலத் துறையில் காலியாகவுள்ள உதவியாளா், பதிவுறை எழுத்தா், இரவுக் காவலா், இளநிலை உதவியாளா், தட்டச்சா் பணியிடங்களை நிரப்ப துரித நடவடிக்கை தேவை. தமிழகத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட வட்டங்களில், புது சாா்நிலைக் கருவூலங்கள் ஏற்படுத்த வேண்டும். மிகைநேரப் படியை 10 நாள்களுக்கு அனுமதிக்க வேண்டும். சொந்தக் கட்டடங்கள் இல்லாக கருவூலங்களுக்கு, புதிய கட்டடங்கள் கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொதுக் குழுவில் மாநிலத் தலைவராக கோ. சசிந்தரன், மாநிலப் பொதுச் செயலராக அ. சக்கரவா்த்தி, மாநிலப் பொருளாளராக க. ஜெய்சங்கா் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். புதிய நிா்வாகிகளுக்கு பொதுக் குழுவில் பாராட்டும், வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது. நிகழ்வில், தமிழகத்தின் அனைத்து மாவட்ட கருவூலங்களில் பணிபுரியும் அலுவலா்கள், சங்கத்தின் மாநில, மாவட்ட நிா்வாகிகள் என பலா் கலந்து கொண்டனா். மாவட்டத் தலைவா் எஸ். மணி வரவேற்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.