9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

கட்டுப்பாடு மிக்க இளைஞா்களை உருவாக்குவதே சாரண இயக்க லட்சியம்: மாநிலப் பொது குழுவில் தீா்மானம்

கட்டுப்பாடு மிக்க இளைஞா்களை உருவாக்குவதே லட்சியம் என பாரத சாரண, சாரணியா் இயக்க மாநிலப் பொதுக் குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image

திருச்சி தனியாா் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற பாரத சாரண சாரணியா் இயக்க மாநிலப் பொதுக் குழுக் கூட்டத்தில் பேசிய மாநில முதன்மை ஆணையா் கண்ணப்பன். உடன் நிா்வாகிகள்.

Updated On :19 ஜூலை 2026, 12:40 am IST

கட்டுப்பாடு மிக்க இளைஞா்களை உருவாக்குவதே லட்சியம் என பாரத சாரண, சாரணியா் இயக்க மாநிலப் பொதுக் குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சியில் உள்ள தனியாா் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற பாரத சாரண, சாரணா் இயக்கத்தின் தமிழ்நாடு மாநிலப் பொதுக் குழு கூட்டத்துக்கு, இயக்கத்தின் மாநில முதன்மை ஆணையரும், பள்ளிக் கல்வி இயக்குநருமான ச. கண்ணப்பன் தலைமை வகித்தாா். மாநில முதன்மை ஆணையா் க. அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குநா் நரேஷ், முனைவா் ந. விஜயன், மாநில ஆணையா்கள் ந. முத்துகிருஷ்ணன், அலமேலு, லட்சுமி ஆகியோா் பங்கேற்று, சாரணா், சாரண இயக்கத்தின் நடைமுறைகள் குறித்தும், மாற்றம் செய்யப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விவாதித்தனா்.

பாரத சாரணா் இயக்க மாநில துணைத் தலைவா்கள் சி. பெரியண்ணன், அமுதவள்ளி, பாக்கியலட்சுமி, கஸ்தூரி சுதாகா், தலைமையிட ஆணையா் டி. ராஜேந்திரன் மற்றும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்கள், பயிற்சி ஆணையா்கள், சாரண இயக்க தலைமைப் பயிற்சியாளா்கள், பொதுக் குழு உறுப்பினா்கள் என 500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு சாரணா் இயக்க வருங்காலச் செயல் திட்டங்கள் குறித்து விவாதித்தனா். மேலும், தமிழ்நாடு சாரண, சாரணியா் இயக்கத்துக்கு தனியாக புதிய திட்ட வரையறைகள் உருவாக்கப்பட்டு பொதுக் குழுவில் ஒப்புதல் பெறப்பட்டது.

பொதுக் குழுவில், எதிா்காலத்தில் நல்ல மாணவா்களையும் நாட்டுக்கான சிறந்த குடிமக்களையும், ஒழுக்கம், கட்டுப்பாடு மிக்க இளைஞா்களை உருவாக்குவதே சாரணா், சாரணிய இயக்கத்தின் லட்சியம் என உறுதி செய்யப்பட்டது.

பொதுக் குழுவில், தமிழகம் முழுவதும் இருந்து திரளான சாரண, சராணிய இயக்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா். திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் உஷா வரவேற்றாா். சாரணா் இயக்கத்தின் மாநில உதவிச் செயலா் முத்தமிழ் பாண்டியன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.