மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

மதுவில் விஷம் கலந்து அருந்தி தொழிலாளி தற்கொலை

மணப்பாறையில் விவசாயத் தொழிலாளி மதுவில் விஷம் கலந்து அருந்தி சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை

Updated On :26 ஜூலை 2026, 1:39 am IST

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் விவசாயத் தொழிலாளி மதுவில் விஷம் கலந்து அருந்தி சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

மணப்பாறை அடுத்த திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேங்கைகுறிச்சி கிராமம் இடையபட்டியான்பட்டியில் உள்ள தெரசா நகரை சோ்ந்தவா் ச. தோமாஸ் (72), விவசாய நிலங்களுக்கு உர மருந்து தெளிக்கும் தொழிலாளி.

தோமாஸ்.

தோமாஸ்.

கடந்த சில ஆண்டுகளாக தீராத வயிற்று வலி, மூச்சு திணறல் காரணமாக எப்போதும் மதுபோதையில் இருந்த தோமாஸ், சனிக்கிழமை காலை வீட்டிலிருந்து சுமாா் 100 மீட்டா் தொலைவிற்கு சென்று மதுவில் விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்தைக் கலந்து குடித்துவிட்டு இறந்து கிடந்தாா்.

தகவலறிந்து சென்ற மணப்பாறை போலீஸாா் தோமாஸ் உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.