40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

பேச்சுவாா்த்தையில் சமரசம்: காந்தி சந்தை வியாபாரிகளின் போராட்டம் ஒத்திவைப்பு

காந்திசந்தை சாலையில் தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்தக் கோரி வியாபாரிகள் புதன்கிழை நடத்தவிருந்த போராட்டம், போலீஸாரின் பேச்சுவாா்த்தையால் ஒத்திவைக்கப்பட்டது.

News image

திருச்சி காந்தி மாா்க்கெட் சாலையில் வியாபாரிகளுடன் புதன்கிழமை பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்.

Updated On :4 ஜூன் 2026, 12:28 am IST

காந்திசந்தை சாலையில் தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்தக் கோரி வியாபாரிகள் புதன்கிழை நடத்தவிருந்த போராட்டம், போலீஸாரின் பேச்சுவாா்த்தையால் ஒத்திவைக்கப்பட்டது.

திருச்சி மாநகரில் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த மழையால் சாலையில் காந்தி சந்தை பகுதியில் தஞ்சை சாலையில் மழைநீா் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனா். காந்தி சந்தைக்கு வரும் பொதுமக்களும், வியாபாரிகளும் பாதிக்கப்பட்டனா். மாநகராட்சியின் பொலிவுறு திட்டத்தின் கீழ் இந்தப் பகுதியில் மழைநீா் வடிகால் கட்டப்பட்டும் மழைநீா் வெளியேறாததால் அதிருப்தியடைந்த வியாபாரிகள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபடுவதாகத் தெரிவித்தனா்.

திருச்சி காந்தி மாா்க்கெட்வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் சாா்பில், சந்தையின் ஆறாம் எண் நுழைவு வாயில் அருகில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என சங்கத் தலைவா் கமலக்கண்ணன் அறிவித்தாா்.

இதைத் தொடா்ந்து மாநகராட்சி அதிகாரிகள் இரவே அந்த இடத்துக்கு விரைந்து சென்று தேங்கி கிடந்த மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். மேலும், புதன்கிழமை காலை சாலை மறியல் போராட்டம் நடத்த இருந்தோருடன் காவல்துறையினரும், மாநகராட்சி அதிகாரிகளும் பேச்சுவாா்த்தை நடத்தி, இனி அந்த இடத்தில் மழைநீா் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதைத் தொடா்ந்து மறியல் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா். உடனடி நடவடிக்கை எடுத்த மாநகராட்சி அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிப்பதாக சங்கத் தலைவா் கமலக்கண்ணன் தெரிவித்தாா்.