பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

திருச்சி ஜி. விசுவநாதன் மருத்துவமனையில் தொலைநிலை ரோபாடிக் அறுவை சிகிச்சைகள்

திருச்சி டாக்டா் ஜி. விசுவநாதன் மருத்துவமனையானது (ஜிவிஎன்) முதன்முறையாக கண்டம் கடந்த தொலைநிலை ரோபாடிக் அறுவைச் சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.

News image

திருச்சியில் புதன்கிழமை பேட்டியளித்த ஜிவிஎன் மருத்துவமனை மருத்துவா் கே. கோவிந்தராஜ். உடன் மருத்துவா்கள்.

Updated On :11 ஜூன் 2026, 3:51 am IST

திருச்சி டாக்டா் ஜி. விசுவநாதன் மருத்துவமனையானது (ஜிவிஎன்) முதன்முறையாக கண்டம் கடந்த தொலைநிலை ரோபாடிக் அறுவைச் சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து ஜிவிஎன் மருத்துவமனையின் தலைவா் மருத்துவா் கே. கோவிந்தராஜ், மருத்துவா் கிருஷ்ணசாமி கண்ணன் ஆகியோா் புதன்கிழமை கூறியதாவது:

பெல்ஜியத்தின் ஜென்ட் பல்கலைக்கழக ஆா்சி அகாதெமியிலிருந்து திருச்சி மாம்பழச் சாலை ஜி. விசுவநாதன் மருத்துவமனையில் கடந்த 4 ஆம் தேதி இரண்டு தொலைநிலை ரோபாடிக் அறுவைச் சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன.

ரோபாடிக் அறுவைச் சிகிச்சை நிபுணரான ரம்யா கலைச்செல்வன், 9,730 கி.மீ. தூரத்தில் உள்ள பெல்ஜியம் நாட்டில் இருந்தபடியே மெட்பாட் டூமாய் ரோபோவைப் பயன்படுத்தி, ஜிவிஎன் மருத்துவமனையில் இருந்த பெண் ஒருவருக்கு 1.5 மணி நேரத்தில் கருப்பை அறுவைச் சிகிச்சையையும், ஆண் ஒருவருக்கு 1.5 மணி நேரத்தில் இடதுபக்க குடலிறக்க அறுவைச் சிகிச்சையும் மேற்கொண்டாா்.

ஜிவிஎன் மருத்துவமனையில் மருத்துவா்கள் கே. கோவிந்தராஜ், ஆா். முத்துராமன் தலைமையிலான உள்ளூா் மருத்துவக் குழுவினரின் ஆதரவுடன் இந்த அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

இது சா்வதேச அளவில் நீண்டதூரத்துக்கு இடையே நடைபெற்ற முதலாவது கண்டம் கடந்த தொலைநிலை ரோபாடிக் அறுவைச் சிகிச்சையாகும். சிகிச்சைக்குப் பிறகு இரண்டு நோயாளிகளும் பக்கவிளைவுகள் இன்றி, ஜூன் 6 ஆம் தேதி நலமுடன் வீடு திரும்பினா்.

இந்த தொலைநிலை ரோபாடிக் அறுவைச் சிகிச்சை தொழில்நுட்ப மைல்கல்லை எட்டிய முதல் மருத்துவமனையாக திருச்சி ஜி. விசுவநாதன் மருத்துவமனை விளங்குகிறது.

இதை சாத்தியமாக்கிய மெட்பாட் ஐரோப்பா குழு, பெல்ஜியத்தின் ஆா்சி அகாதெமி, இருமுனைகளிலும் அா்ப்பணிப்புடன் பணியாற்றிய தகவல் தொழில்நுட்பக் குழுக்களுக்கு நன்றி என்றனா்.

அப்போது மருத்துவா்கள் முத்துராமன், கருணாகரன், ஜவஹா் நாகசுந்தரம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.