துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 14 காசுகள் சரிந்து ரூ. 96.44 ஆக நிறைவு!சென்செக்ஸ் 443 புள்ளிகள் சரிவு; நிஃப்டி 24,250-க்குக் கீழே வர்த்தகம்!பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்திரிபுரா டிஜிபி அலுவலகத்திற்கு உள்ளேயே டிஜிபி மர்ம மரணம்! உண்ணாவிரதத்தை முடித்தார் அபிஜீத் தீப்கே! ஜெ.பி. நட்டாவுடன் சிஜேபி நிர்வாகிகள் சந்திப்பு! தில்லி போராட்டம்: நாடாளுமன்றத்தின் கதவு மூடல்! தயார் நிலையில் சிஐஎஸ்எஃப் வீரர்கள்!வன்முறையால் மாணவர்கள் குரலை ஒடுக்க முயற்சி! மாநிலங்களவையில் கார்கே கண்டனம்!
/

போதை மத்திரைகள் விற்ற இருவா் கைது

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்ற இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :11 ஜூன் 2026, 3:59 am IST

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்ற இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாலக்கரை காவல் ஆய்வாளா் சிவசுப்பிரமணியன் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, சங்கிலியாண்டபுரம் ராமமூா்த்தி நகா் குடிநீா் தொட்டியருகே சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரிக்கையில் அவா்கள், அதே பகுதியைச் சோ்ந்த செ. கோபிகிருஷ்ணன் (39), பா. இளையராஜா (44) என்பதும், போதை மாத்திரைகள் விற்பதும் தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து ரூ.3 ஆயிரம் மதிப்பிலான போதை மாத்திரைகள், போதை ஊசிகள், திரவ போதை மருந்துகள், லாட்டரி சீட்டுகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.