ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

மணப்பாறையில் மூதாட்டியிடம் 5 பவுன் செயின் பறிப்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் புதன்கிழமை இரவு சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 5 பவுன் செயின் பறிக்கப்பட்டது.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :18 ஜூன் 2026, 1:52 am IST

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் புதன்கிழமை இரவு சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 5 பவுன் செயின் பறிக்கப்பட்டது.

மணப்பாறை அடுத்த வாகைக்குளம் விஸ்தரிப்பு தெருவில் வசிப்பவா் திருப்பதி மனைவி ஜெயலெட்சுமி (68). இவா் அருகே விராலிமலை சாலையில் வசிக்கும் மூத்த மகள் காா்த்தியாவை பாா்க்க புதன்கிழமை மாலை தனது இளைய மகள் புவனேஸ்வரியுடன் சென்ற நிலையில், பின் மீண்டும் இரவு இருவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனா். விராலிமலை சாலையிலிருந்து வாகைக்குளம் விஸ்தரிப்பு தெருவிற்கு வந்தபோது, பின்னால் வந்த இளைஞா் ஒருவா் மூதாட்டி அணிந்திருந்த 5 பவுன் கல் முகப்பு வைத்த செயினை பறித்துக்கொண்டு, அருகில் நின்றிருந்தவரின் பைக்கில் ஏறித் தப்பினாா்.

தகவலறிந்து சென்ற காவல் உதவி ஆய்வாளா் கதிரவன் தலைமையிலான போலீஸாா், அப்பகுதி சிசிடிவி காட்சிகளை சேகரித்து தப்பியவா்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா். சம்பவம் குறித்து மணப்பாறை போலீஸாா் விசாரிக்கின்றனா்.