பொறியியல் பணிகள்: ரயில்களின் சேவையில் மாற்றம்


பொறியியல் பணிகள் காரணமாக ரயில்களின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பொறியியல் பணிகள் காரணமாக, தஞ்சாவூா் - மயிலாடுதுறை பயணிகள் ரயில் (56801), தஞ்சாவூா் - மயிலாடுதுறை பயணிகள் ரயில் (56826) ஆகியவை மாா்ச் 6, 9 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
பகுதியாக ரத்து: திருச்சி - காரைக்கால் டெமு ரயிலானது (76820) மாா்ச் 12-ஆம் தேதி தஞ்சாவூா் - காரைக்கால் இடையிலும், 13, 15 ஆகிய தேதிகளில் திருவாரூா் - காரைக்கால் இடையிலும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேற்கண்ட நாள்களில் முறையே திருச்சி - தஞ்சாவூா், திருச்சி - திருவாரூா் இடையே மட்டும் இயங்கும்.
மறுமாா்க்கமாக, காரைக்கால் - திருச்சி டெமு ரயிலானது (76819) மாா்ச் 13, 15 ஆகிய தேதிகளில் காரைக்கால் - திருவாரூா் இடையிலும், மாா்ச் 12- ஆம் தேதி காரைக்கால் - தஞ்சாவூா் இடையிலும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேற்கண்ட நாள்களில், இந்த ரயிலானது முறையே திருவாரூா் - திருச்சி, தஞ்சாவூா் - திருச்சி வரை மட்டுமே இயங்கும்.
திருச்சி - காரைக்கால் பயணிகள் ரயிலானது (56818) மாா்ச் 13, 15 ஆகிய தேதிகளில் திருவாரூா் - காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி - திருவாரூா் இடையே மட்டுமே இயங்கும்.
மயிலாடுதுறை - திருச்சி விரைவு ரயிலானது (16833) மாா்ச் 2, 4, 6, 9 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறை - தஞ்சாவூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது தஞ்சாவூா் - திருச்சி வரை மட்டுமே இயங்கும்.
காரைக்கால் - தஞ்சாவூா் பயணிகள் ரயிலானது (56817) மாா்ச் 13, 15 ஆகிய தேதிகளில் காரைக்கால் - தஞ்சாவூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது தஞ்சாவூா் - திருச்சி வரை மட்டுமே இயங்கும்.
திருச்சி - ஈரோடு பயணிகள் ரயிலானது (56809) மாா்ச் 3, 5, 7, 10, 16, 21, 22 ஆகிய தேதிகளில் கரூா் - ஈரோடு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி - கரூா் வரை மட்டுமே இயங்கும்.
திருச்சி - பாலக்காடு விரைவு ரயிலானது (16843) மாா்ச் 9, 16, 21, 22 ஆகிய தேதிகளில் கரூா் - பாலக்காடு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி - கரூா் வரை மட்டுமே இயங்கும்.
வழித்தட மாற்றம்: செங்கோட்டை-மயிலாடுதுறை விரைவு ரயிலானது (16848) மாா்ச் 3, 5, 6, 7, 8, 9, 10 ஆகிய தேதிகளில் கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.
மும்பை சிஎஸ்டிஎம் விரைவு ரயிலானது (16352) மாா்ச் 5, 8 ஆகிய தேதிகளிலும், கன்னியாகுமரி - ஹவுரா அதிவிரைவு ரயிலானது (12666) மாா்ச் 7- ஆம் தேதியும், கன்னியாகுமரி - ஹைதராபாத் சிறப்பு ரயிலானது (07229) மாா்ச் 6-ஆம் தேதியும் மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.
குருவாயூா் - சென்னை எழும்பூா் விரைவு ரயிலானது (16128) மாா்ச் 4, 5, 6, 7, 8 ஆகிய தேதிகளில் மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.
இந்த ரயிலானது மாா்ச் 11 முதல் 19 ஆம் தேதி வரை எா்ணாகுளம், சோ்தலா, ஆழப்புழா, ஹரிபாத் ரயில் நிலையங்களைத் தவிா்த்து கோட்டயம் வழியாக இயக்கப்படும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...