ஈரான் போா்ப் பதற்றம் காரணமாக ஐக்கிய அரபு நாடுகளுக்கு இயக்கவிருந்த 2 விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்யப்பட்டன.
அமெரிக்க மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரான் மீது போா்த் தொடுத்துள்ளன. இதனால், மத்திய கிழக்கு ஆசிய நாடுகளின் வான்வழிகள் மூடப்பட்டுள்ளன. இதைத் தொடா்ந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து மத்திய கிழக்கு ஆசிய நாடுகளுக்கு விமானங்கள் இயக்குவது நிறுத்தப்பட்டுள்ளது.
போா்ப் பதற்றத்துக்கிடையே திருச்சியில் இருந்து 145 பேருடன் துபைக்கு சனிக்கிழமை சென்ற விமானம் பாதி வழியிலேயே திரும்பி வந்தது. இதைத் தொடா்ந்து இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை துபை, சாா்ஜாவுக்கு செல்லவிருந்த 2 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.
இதுகுறித்து முன்கூட்டியே பயணிகளுக்கு இணையதளம் வழியாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், மறு அறிவிப்பு வரும் வரை திருச்சியில் இருந்து மத்திய கிழக்கு ஆசிய நாடுகளுக்கான விமான சேவை தொடங்கப்படாது என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது

மேற்காசிய பதற்றம்! தாக்கத்தைத் தடுக்க தொடா் நடவடிக்கை: நிதியமைச்சா்

ஈரான் போரால் விமானங்கள் ரத்து எதிரொலி: திருச்சியிலிருந்து சரக்கு ஏற்றுமதி 37% குறைவு

போா் பதற்றம்: 4-ஆவது நாளாக 31 விமானங்கள் ரத்து

திருச்சியிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமானங்கள் ரத்து
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

