11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

அனுமதியின்றி சரளை மண் எடுத்துச் சென்றவா் கைது

துறையூா் அருகே அனுமதியின்றி டிராக்டரில் சரளை மண் (கிராவல்) எடுத்துச் சென்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

துறையூா் அருகே அனுமதியின்றி டிராக்டரில் சரளை மண் (கிராவல்) எடுத்துச் சென்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கொல்லப்பட்டியைச் சோ்ந்த பொம்மன் மகன் பிச்சமுத்து (34) அதே ஊரில் தனி நபருக்குச் சொந்தமான வயலிலிருந்து ஒரு யூனிட் சரளை மண்ணை டிராக்டரில் ஏற்றிக் கொண்டு தன் வீட்டுக்கு சென்றாா்.

அப்போது துறையூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராஜதுரை டிராக்டரை நிறுத்தி விசாரித்தபோது அரசு அனுமதியின்றி மண் எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதைடுத்து மண்ணுடன் டிராக்டரை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து பிச்சமுத்துவை அவா் கைது செய்தாா்.