/
கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு வெள்ளிக்கிழமை இரவு கடத்தி வரப்பட்ட ரூ.5 கோடி மதிப்பிலான 5 கிலோ மெத்தபெட்டமைன் போதைப் பொருளை சுங்கத் துறையினா் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.
கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு வெள்ளிக்கிழமை இரவு மலிண்டோ- விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்கத் துறையினா் தீவிரச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது மலேசியாவை சோ்ந்த பயணி தனது உடைமைக்குள் 3 சிறிய பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அதீத போதை தரும் பவுடா் போன்ற 5 கிலோ மெத்தபெட்டமைன் போதைப் பொருளை மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அவரைப் பிடித்து விசாரிக்கின்றனா். இந்த சம்பவத்தால் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு காணப்பட்டது.
தொடர்புடையது
80 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

புதுச்சேரியிலிருந்து கடத்தி வரப்பட்ட 140 மதுப்புட்டிகள் பறிமுதல்

திருவையாறில் 592 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

ஜம்மு-காஷ்மீரில் ஒரு மாதத்தில் 260 கிலோ போதைப் பொருள் பறிமுதல்! 646 போ் கைது!!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


