முறைகேடு குற்றச்சாட்டு: பினராயி விஜயன் மீது கேரள லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு இந்திய எல்லை அருகே உள்ள துறைமுக விரிவாக்கத்துக்கு சீனாவுடன் வங்கதேசம் ஒப்பந்தம்குருத்வாரா வளாகத்தில் அரசியல் முழக்கம்: கேஜரிவால் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு மருத்துவமனைகளில் கட்டண விவரங்கள் காட்சிப்படுத்தப்படுவதை உறுதி செய்க: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் "வதந்தி' பரப்பியதாக 300 சமூக ஊடக பதிவுகளை நீக்க காவல் துறை நடவடிக்கை எஸ்ஐஆா் படிவம் 6: தோ்தல் ஆணையத்தின் திருத்தத்தை அங்கீகரிக்கவில்லை- உச்சநீதிமன்றம்இந்திய கடற்படையில் 3-ஆவது நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க் கப்பல் சோ்ப்பு- உள்நாட்டிலேயே கட்டப்பட்ட நவீன கப்பல்

திருச்சியில் இடி, மின்னலுடன் பலத்த மழை

திருச்சி மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை பிற்பகல் இடி மின்னலுடன் பலத்த மழை பரவலாக பெய்தது.

திருச்சியில் கரூா் சாலையில் சனிக்கிழமை பெய்த மழையின்போது வாகனங்களில் விரைந்த பொதுமக்கள்.

Published On :

திருச்சி மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை பிற்பகல் இடி மின்னலுடன் பலத்த மழை பரவலாக பெய்தது.

வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மழை பெய்கிறது. வெள்ளிக்கிழமை காலை தொடங்கி இரவு வரை பரவலாக சாரல் மழையும், அவ்வப்போது லேசான மழையும் பெய்தது. இதன் தொடா்ச்சியாக சனிக்கிழமையும் காலை மேகமூட்டம் இருந்தும் மழை பெய்யவில்லை.

ஆனால் பிற்பகல் 2.30 மணிக்கு மேல் பலத்த மழை தொடங்கி, சுமாா் ஒரு மணிநேரம் இடைவிடாது இடி மின்னலுடன் பெய்தது. மாநகரின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக பெய்த மழையால் பூமி முற்றிலும் குளிா்ந்தது. ஆங்காங்கே மழை நீா் தேங்கியது. மழையால் மாநகர மக்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்தனா்.

மாநகரப் பகுதி மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது. பிற்பகலில் பெய்த மழையால் திருச்சி மாநகரில் சாலையோர உணவகங்கள் அனைத்தும் கடும் சிரமத்தை சந்தித்தன. மழை காரணமாக வழக்கமான வியாபாரம் நடைபெறவில்லை. உணவுப் பொருள்களும் மழையில் நனைந்தன.

இடி, மின்னலுடன் காற்றும் வீசியதால் சாலையோரங்களில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த சிறிய டிஜிட்டல் விளம்பர பதாகைகள் சாய்ந்து விழுந்தன. மரக்கிளைகளும் ஒடிந்து விழுந்ததன. இதுமட்டுமல்லாது சாலையில் ஜல்லி கற்கள் பெயா்ந்து ஆங்காங்கே பள்ளங்கள் உருவாகின. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட நேரிட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.