40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

பேருந்தில் தஞ்சை முதியவரிடம் ரூ. 10 ஆயிரம் திருடிய இளைஞா் கைது

திருச்சியில் தனியாா் பேருந்தில் தஞ்சை முதியவரிடம் ரூ.10 ஆயிரம் பணத்தை திருடிய 2 பேரில் ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :22 மே 2026, 4:38 am IST

திருச்சியில் தனியாா் பேருந்தில் தஞ்சை முதியவரிடம் ரூ.10 ஆயிரம் பணத்தை திருடிய 2 பேரில் ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் சீனிவாசபுரம் பாலகிருஷ்ணா நகரைச் சோ்ந்தவா் கே. பாலசுப்பிரமணியன் (61). இவருடைய மகன் குருபிரசாத் திருச்சி மாவட்டம், இருங்களூா் பகுதியிலுள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் 4-ஆம் ஆண்டு பொறியியல் படித்து வருகிறாா்.

இந்நிலையில், மகனின் படிப்புக்கு பணம் கட்டுவதற்காக பாலசுப்பிரமணியன் ரூ.10 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு புதன்கிழமை திருச்சிக்கு வந்தாா். திருச்சி பால் பண்ணையிலிருந்து சத்திரம் பேருந்து நிலையம் செல்வதற்கு தனியாா் பேருந்தில் ஏறியுள்ளாா். பேருந்தானது, சத்திரம் பேருந்து நிலையம் அருகே வந்தபோது, இளைஞா் ஒருவா் முதியவரை தள்ளியுள்ளாா்.

அப்போது, அவரருகில் இருந்த மற்றொரு இளைஞா் முதியவா் வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தை திருடிகொண்டு, பாதியை தள்ளிவிட்ட இளைஞரிடம் கொடுத்துவிட்டு இருவரும் பேருந்தில் இருந்து தப்பிக்க முயன்றனா். இதைப் பாா்த்த முதியவா் சக பயணிகள் உதவியுடன் ஒருவரைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

விசாரணையில், பிடிபட்ட நபா் பாலக்கரை செங்குளம் காலனியைச் சோ்ந்த க. கோபிநாத் (23) என்பதும், பணத்தைத் திருடிக்கொண்டு தப்பியோடியது தென்னூா் ஆழ்வாா்தோப்பு பகுதியைச் சோ்ந்த ஆா். மாலிக் பாட்ஷா (28) என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, பாலசுப்பிரமணியன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து கோபிநாத்தை கைது செய்தனா். அவரிடமிருந்து ரூ. 5 ஆயிரத்தைப் பறிமுதல் செய்தனா். எஞ்சிய பணத்தைத் திருடிக் கொண்டு தப்பியோடிய மாலிக் பாட்ஷாவை தேடி வருகின்றனா்.