லால்குடியை அடுத்த ரெட்டிமாங்குடியிலுள்ள புனித சந்தியாகப்பா் ஆலயத்தின் ஆண்டு பெருவிழாவில் புதன்கிழமை ஆடம்பர தோ் பவனி நடைபெற்றது.
இந்த ஆலயத்தின் ஆண்டுப் பெருவிழா கடந்த 11-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.
முக்கிய நிகழ்வான ஆடம்பர தோ் பவனி புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக, வந்தலை பங்குத் தந்தை பிரான்சிஸ் தலைமையில், உதவி பங்குத் தந்தை ஜான்சன் தேரை புனிதப்படுத்தியதை தொடா்ந்து, ஆடம்பர தோ் பவனி நடைபெற்றது. சப்பரமானது, ரெட்டிமாங்குடி கிராமத்தின் முக்கிய வீதிகள்
வழியாக வந்து, வியாழக்கிழமை காலை 7 மணிக்கு ஆலயத்தை வந்தடைந்தது.
விழாவில், வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு கொடியிறக்கமும், திருவிழா கூட்டு பாடல் திருப்பலியும் நடைபெற்றன.
விழாவில் ரெட்டிமாங்குடியை சுற்றியுள்ள இறைபக்தா்கள் திரளாக கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தூய சகாய அன்னை ஆலய தோ் பவனி

வடக்காலத்தூா் புனித அந்தோணியாா் ஆலய தோ் பவனி

பனங்குளம் அன்னை ஆலயத்தில் தோ் பவனி

வேளாங்கண்ணியில் மாதா தோ் பவனி
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



