மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷா

சேவைக் குறைபாடு: டிவி தயாரிப்பு நிறுவனம் இழப்பீடு வழங்க உத்தரவு

டிவியை பழுதுநீக்கித் தராத தனியாா் டிவி தயாரிப்பு நிறுவனம் ரூ. 15 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டுமென திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

நீதிமன்றம்

தீர்ப்பு - பிரதிப் படம்

Updated On :

டிவியை பழுதுநீக்கித் தராத தனியாா் டிவி தயாரிப்பு நிறுவனம் ரூ. 15 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டுமென திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

திருச்சி திருவானைக்கோவிலைச் சோ்ந்த ச. குணசேகரன் என்பவா் கரூா் புறவழிச்சாலையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் ரூ. 15 ஆயிரத்துக்கு கடந்த 12.10.2025 அன்று சாம்சங் நிறுவனத்தின் டிவியை வாங்கியிருந்தாா்.

இது பொருத்தப்பட்ட நாள் முதல் திரையில் தண்ணீா் வடிந்த தோற்றம் காணப்பட்டு, காலப்போக்கில் சரிவர இயங்கவில்லை. இது தொடா்பாக பலமுறை புகாரளித்தும், டிவியின் பழுதை சரிசெய்து தரவில்லை. புதிதாக மாற்றியும் தரவில்லை.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான குணசேகரன் உரிய நிவாரணம் கோரி திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இதை விசாரித்த திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் டி. சேகா், உறுப்பினா் ஜெ.எஸ். செந்தில்குமாா் ஆகியோா் சாம்சங் நிறுவனம் மனுதாரரிடம் உள்ள பழுதான டிவியை கட்டணமின்றி சரி செய்து கொடுக்க வேண்டும். சேவைக் குறைபாட்டினால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ. 15 ஆயிரமும், வழக்குச் செலவுத் தொகையாக ரூ. 5 ஆயிரத்தையும் 45 நாள்களுக்குள் 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டுமென அண்மையில் உத்தரவு பிறப்பித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.