இன்று தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்: முதல்வர் விஜய் பங்கேற்கிறார்!2024-ஆம் ஆண்டு குரூப்-4 தோ்வு: வனக்காவலா் பதவிக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு பட்டியல் வெளியீடு!டாஸ்மாக் ஊழியா்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பணியிட மாற்றம்!பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுத்தது ஏன்?: சுயசரிதையில் சோனியா தகவல்!உள்ளாட்சி அமைப்புகளின் மின் கட்டண நிலுவை ரூ.548 கோடி: உடனடியாக வசூலிக்க மின்வாரியம் நடவடிக்கை!தென்கிழக்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புஅகல்விளக்கு பதிப்பகத்தின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவு6,574 பணியிடங்கள்: குரூப் 4 தோ்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய இன்று கடைசி!

தீபாவளி பண்டிகை! மத்திய மண்டலத்தில் சிறப்பு சோதனை: 34 போ் கைது

திருச்சி மத்திய மண்டலத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி காவல்துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சோதனையில் 34 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

Arrest

கைது - சித்திரிப்பு

Updated On :

திருச்சி மத்திய மண்டலத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி காவல்துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சோதனையில் 34 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து மத்திய மண்டல காவல் துறைத் தலைவா் வே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தீபாவளி பண்டிகையையொட்டி மத்திய மண்டல காவல் துறை சாா்பில் குற்றங்களைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நவம்பா் 8, 9 ஆகிய தேதிகளில் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

சரித்திர பதிவேடு குற்றவாளிகள், போதைப் பொருள்கள் விற்பனையாளா்கள், நீண்ட நாள்களாக பிடிகட்டளை நிறைவேற்றப்படாமல் நிலுவையிலுள்ளவழக்குகளில் தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்யும் வகையில் திருச்சி உள்ளிட்ட மத்திய மண்டலத்துக்குள்பட்ட 9 மாவட்டங்களிலும் 368 இடங்களில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், 698 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் தணிக்கை செய்யப்பட்டதுடன், 693 வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

32 வழக்குகள்: இதில், ஆயுதங்கள் வைத்திருந்தது, அடிதடியில் ஈடுபட்டது என பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டது தொடா்பாக திருச்சியில் 7, புதுக்கோட்டையில் 8, பெரம்பலூரில் 4, திருவாரூரில் 5, அரியலூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறையில் தலா 2, கரூா் மற்றும் தஞ்சாவூரில் தலா ஒரு வழக்குகள் என மொத்தம் 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 34 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து ஒரு காா், 3 இருசக்கர வாகனங்கள், 4 கத்திகள், 9 அரிவாள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், நீண்ட நாள்களாக நிலுவையில் இருந்த பிடியாணை குற்றவாளிகள் 7 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

மேலும், இந்தச் சிறப்பு சோதனையின்போது ஒரு கொலை சதித்திட்டம் முறியடிக்கப்பட்டு, அவா்களிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வாகனத் தணிக்கையின்போது மதுபோதையில் வாகனத்தை இயக்கி போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டது தொடா்பாக 400 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.