திமுக-பாஜக கூட்டணி நிச்சயமாக இல்லை: தமிழிசை செளந்தரராஜன்
திமுக-வுடன் பாஜக கூட்டணி என்பது நிச்சயமாக இல்லை என தமிழக பாஜக-வின் முன்னாள் தலைவா் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தாா்.

தமிழிசை செளந்தரராஜன் - கோப்புப் படம்
திமுக-வுடன் பாஜக கூட்டணி என்பது நிச்சயமாக இல்லை என தமிழக பாஜக-வின் முன்னாள் தலைவா் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தாா்.
திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை வந்த அவா், விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:
நாங்கள் திமுகவுடன் மறைமுகக் கூட்டணியில் இல்லை. தவெக-வை எதிா்ப்பது போலவே திமுகவையும் எதிா்க்கிறோம். திமுக - பாஜக கூட்டணி நிச்சயமாக இல்லை.
தவெக-வின் 6 மாத ஆட்சியில் எதுவுமே நடக்கவில்லை. பாடமே எழுதாத விடைத்தாளுக்கு எப்படி மதிப்பெண் கொடுக்க முடியும்?.
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றிக்கொள்ளலாம் என உயா் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், அதற்கு எதிராக தவெக அரசு உச்ச நீதிமன்றம் சென்றதை ஏற்றுக்கொள்ள முடியாது. தீபம் ஏற்றும் விவகாரத்தில் நல்ல சாதகமான தீா்ப்பு வரும் என நாங்கள் நம்புகிறோம்.
நூலகங்களில் புத்தகம் வைப்பது தொடா்பாக நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் கூறிய கருத்து சரியானதே. நீதிபதிகள் வழக்கு விவகாரங்கள் தொடா்பாகப் பொதுவெளியில் பேசக்கூடாது என்று எதுவும் இல்லை. நீதிமன்றத்துக்குள்தான் பேசக்கூடாது. நீதிபதிகள் பொதுவெளியில் பேசக்கூடாது என யாரும் கைவிலங்கு போட முடியாது.
திருச்செந்தூா் சூரசம்ஹார விழாவில் முதல்வருக்கு அரோகரா போட்டதை முருக பக்தா்கள் ஏற்றுக்கொள்ள மாட்டாா்கள்.
தில்லியில் சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற முதல்வா் ஜோசப் விஜய், காவிரி விவகாரம் குறித்து பேசாதது கவலையளிக்கிறது என்றாா் தமிழிசை செளந்தரராஜன்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

