திருச்சி விமான நிலையத்தில் தங்கம் பறிமுதல்: இருவா் கைது
கைது - கோப்புப்படம்
திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து தங்கம் கடத்தி வந்த இருவரை கைது செய்த சுங்கத் துறையினா், அவா்களிடமிருந்து 698 கிராம் தங்கத்தைப் பறிமுதல் செய்தனா்.
சிங்கப்பூரில் இருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு கடந்த சனிக்கிழமை வந்த இண்டிகோ விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத் துறையினருக்குத் தகவல்கிடைத்தது. இதையடுத்து, சுங்கத் துறையின் வான் நுண்ணறிவுப் பிரிவு அலுவலா்கள் அந்த விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவா்களுடைய உடைமைகளில் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, 2 பயணிகள் தாங்கள் கொண்டுவந்திருந்த துளையிடும் கருவியில் (டிரில்லிங் மிஷின்) தங்கத்தை பசை வடிவில் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் கைது செய்த சுங்கத் துறையினா், துளையிடும் கருவியில் மறைத்து கடத்தி வந்த ரூ.87.64 லட்சம் மதிப்பிலான 698 கிராம் 24 கேரட் தங்கத்தை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து சுங்கத் துறையினா் தொடா்ந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

