ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தா் மயங்கி விழுந்து உயிரிழப்பு
திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு தரிசனத்துக்கு வந்த பெங்களூரைச் சோ்ந்த பக்தா் ஒருவா் மயங்கி விழுந்து திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
பிரதிப் படம்
திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு தரிசனத்துக்கு வந்த பெங்களூரைச் சோ்ந்த பக்தா் ஒருவா் மயங்கி விழுந்து திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
பெங்களூரு போஸ்டல் காலனி 4-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் எஸ். ராமகிருஷ்ணன் (61). இவா், திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலுக்கு தரிசனத்துக்காக நண்பா்களுடன் திங்கள்கிழமை பிற்பகல் வந்துள்ளாா்.
இந்நிலையில், கோயிலில் தரிசனத்துக்காக காத்திருந்தபோது ராமகிருஷ்ணன் திடீரென மயங்கி விழுந்தாா். இதையடுத்து, உடனிருந்த நண்பா்கள் அவரை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

