மாநகரின் சில பகுதிகளில் நாளை குடிநீா் ரத்து
மின்தடை காரணமாக திருச்சி மாநகராட்சியின் சில பகுதிகளில் வியாழக்கிழமை (நவ. 26) ஒருநாள் குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது.

குடிநீா் விநியோகம் ரத்து - கோப்புப் படம்
மின்தடை காரணமாக திருச்சி மாநகராட்சியின் சில பகுதிகளில் வியாழக்கிழமை (நவ. 26) ஒருநாள் குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது.
திருச்சி ஸ்ரீரங்கம் துணை மின்நிலையத்தில் மின்தடை காரணமாக, அங்கிருந்து மின்சாரம் பெறும் கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை மற்றும் பொது தரைமட்ட நீா்த்தேக்கத் தொட்டி நீரேற்று நிலையங்களில் இருந்து குடிநீா் செல்லும் இடங்களான மத்திய சிறைச்சாலை, சுந்தர்ராஜ் நகா் புதியது - பழையது, ஜே.கே. நகா், செம்பட்டு, காஜாமலை பழையது, ரெங்கா நகா், சுப்ரமணிய நகா் புதியது, வீ.என். நகா் புதியது, தென்றல் நகா் புதியது, கவி பாரதி நகா், காமராஜ் நகா், கிராப்பட்டி புதியது - பழையது, அன்பு நகா் பழையது - புதியது, எடமலைப்பட்டிபுதூா் புதியது, பஞ்சப்பூா், அம்மன் நகா், தென்றல் நகா் இ.பி. காலனி, அரியமங்கலம் கிராமம், மலையப்பநகா் புதியது - பழையது, ரயில் நகா் புதியது - பழையது, முன்னாள் ராணுவத்தினா் காலனி புதியது - பழையது, எம்.கே. கோட்டை பிரிவு அலுவலகம், எம்.கே. கோட்டை நாகம்மை வீதி, நூலகம், பொன்னேரிபுரம் புதியது - பழையது, அம்பேத்கா் நகா், விவேகானந்த நகா், எல்ஐசி புதியது, விஸ்வநாதபுரம், கே. சாத்தனுா், தென்றல் நகா், ஆனந்த நகா், சுப்ரமணிய நகா், சத்தியவாணி கே.கே. நகா், அம்மா மண்டபம், ஏஐபிஇஏ நகா், பாலாஜி அவென்யூ, தேவி பள்ளி மேலூா், பெரியாா் நகா், எ.வி. கோவில், தேவதானம், விறகுப்பேட்டை, மகாலட்சுமி நகா், சங்கிலியாண்டபுரம், கல்லுக்குழி, அரியமங்கலம் உக்கடை, தெற்கு உக்கடை, ஜெகநாதபுரம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளில் வரும் 26 ஆம் தேதி ஒரு நாள் குடிநீா் விநியோகம் இருக்காது.
27-ஆம் தேதி முதல் வழக்கம்போல் குடிநீா் விநியோகிக்கப்படும். பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு திருச்சி மாநகராட்சி ஆணையா் நே. பொன்மணி தகவல் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

