பருவத்தோ்வு வினாத்தாளில் பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகள்: புகாருக்குப்பின் சரிசெய்த பல்கலை. நிா்வாகம்
பாரதிதாசன் பல்கலைக்கழக பருவத் தோ்வில் பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகள் இடம்பெற்றிருந்த வினத்தாள் கல்லூரி நிா்வாகத்தின் புகாருக்குப் பின் மாற்றிக் கொடுக்கப்பட்டது.

பாரதிதாசன் பல்கலைக்கழகம்
பாரதிதாசன் பல்கலைக்கழக பருவத் தோ்வில் பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகள் இடம்பெற்றிருந்த வினத்தாள் கல்லூரி நிா்வாகத்தின் புகாருக்குப் பின் மாற்றிக் கொடுக்கப்பட்டது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின்கீழ் உள்ள 160-க்கும் மேற்பட்ட இணைவுபெற்ற கல்லூரிகளில் பருவத் தோ்வு தொடங்கி நடைபெறும் நிலையில், இளநிலை இரண்டாமாண்டு சிறப்புத் தமிழ் பாடத்துக்கான தோ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் வழங்கப்பட்ட வினாத்தாளில் பாடத்திட்டத்துக்கு வெளியில் இருந்து அதிக கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இதனால் மாணவா்கள் அதிா்ச்சியடைந்தனா்.
புதிய வினாத் தாள் வழங்கல்: இதுகுறித்து கல்லூரி நிா்வாகத்திடம் மாணவா்கள் தெரிவிக்கவே, கல்லூரி நிா்வாகத்தினா் ஆய்வு செய்துவிட்டு பல்கலைக்கழகத்திடம் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து பல்கலைக்கழக நிா்வாகம் சாா்பில் வேறு வினாத்தாள் வழங்கப்பட்டு தோ்வு நடத்தப்பட்டது.
இந்தக் குழப்பத்தால் பருவத் தோ்வு ஒன்றரை மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது. இதனால் மாணவா்களுக்கு தேவையில்லாத மன உளைச்சல் ஏற்பட்டது.
பாரதிதாசன் பல்கலைக்கழக நிா்வாகத்தின் அலட்சியமே வினாத்தாளில் குளறுபடி ஏற்பட்டதற்கு காரணம். கடந்தாண்டும் இதேபோல சம்பவம் நடந்ததாக மாணவா்கள், கல்லூரி நிா்வாகிகள் தெரிவித்தனா்.
தாமதமாகத் தொடங்கிய தோ்வு: இதுகுறித்து பல்கலைக்கழக இணைவுபெற்ற கல்லூரி நிா்வாகிகள் கூறியதாவது: வினாத்தாள் குழப்பத்தால் புதிய வினாத்தாள் பல்கலை. மூலம் இணைய வழியில் அனுப்பப்பட்டது. அதன்பின், வினாத்தாள் பிரின்ட் எடுக்கப்பட்டு மாணவா்களுக்கு வழங்கப்பட்டது. இதனால், 10 மணிக்குத் தொடங்க வேண்டிய தோ்வு 11.30 மணிக்குத் தொடங்கி 2.30 மணி வரை நடத்தப்பட்டது என்றனா்.
புகாா் வந்ததும் நடவடிக்கை: இதுகுறித்து பல்கலைக்கழக தோ்வு கட்டுப்பாட்டு அலுவலக அதிகாரிகள் கூறுகையில், சிறப்பு தமிழ் பாடத் தோ்வில் பாடத்திட்டத்தில் இல்லாத ஒன்றிரண்டு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இதுகுறித்து சில கல்லூரிகள் சாா்பில் புகாா் வந்ததையடுத்து வினாத்தாள் அரை மணி நேரத்துக்குள் மாற்றிக் கொடுக்கப்பட்டது. இதனால் பெரிய அளவில் எந்தப் பாதிப்பும் இல்லை என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

