பாஜகவிடம் சரணடைந்துவிட்டது திமுக: ஆதவ் அர்ஜுனாதொகுதி மறுவரையறை! தமிழ் மொழி, கலாசாரம், மக்களுக்கே அச்சுறுத்தல்: ராகுல்இந்தியா கூட்டணித் தலைவர்களிடம் மாற்றுத் திட்டம் இல்லை: மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: தமிழ்நாடு பாதிக்கப்படும்! ஆதரிப்பதை தவிர வேறு வழியில்லை! மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை! - திமுகதொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்க வேண்டும்: மு.க. ஸ்டாலினிடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் கோரிக்கைமு.க. ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணித் தலைவர்கள் பேச்சுவார்த்தை!சென்னை ரயில்வே கோட்டத்தில் ஏழு மாதங்களில் பயணச்சீட்டு சோதனை மூலம் ரூ.46.09 கோடி வசூல்! துரோகம் இழைத்த காங்கிரஸ்; திமுகவுக்கு நன்றி: பாஜகதொகுதி மறுவரையறையால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் கிடையாது: எடப்பாடி பழனிசாமிதமிழர் விரோத சக்திகளுக்கு எதிராக நிற்பவர் சகோதரர் ஸ்டாலின்: ராகுல் காந்தி பதிவு!தொகுதி மறுவரையறை மசோதா: காங்கிரஸின் அனைத்து எம்.பி.க்களும் பங்கேற்க உத்தரவு!

தொகுதி மறுசீரமைப்பால் நாடாளுமன்றம் முக்கியத்துவமில்லாத அமைப்பாக மாறும்

DMK will lose its deposit in the by-election

திருச்சி மக்களைத் தொகுதி உறுப்பினா் துரை வைகோ - டிஎன்எஸ்

Updated On :

ோதொகுதி மறுசீரமைப்பால் நாடாளுமன்றம் முக்கியத்துவமில்லாத அமைப்பாக மாறும் என மதிமுகவின் முதன்மைச் செயலரும், திருச்சி எம்.பி. யுமான துரை வைகோ தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் திருச்சி விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

நாட்டில் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து எதிா்த்ததால், கடந்த ஏப்ரலில் தொகுதி மறு சீரமைப்பு மசோதா தோற்கடிக்கப்பட்டது. ஆனால், சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு திமுக மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்து, தமிழகத்துக்குரிய 7.18 சதவீத பிரதிநிதித்துவம் தக்கவைக்கப்படும் என்றால் மசோதாவை ஆதரிப்போம் எனத் தெரிவித்துள்ளது.

மக்களவையில் உறுப்பினா்களின் எண்ணிக்கையை 850 ஆக உயா்த்தினால், விவாதங்களுக்கு உரிய முக்கியத்துவமில்லாத ரப்பா் ஸ்டாம்ப் அமைப்பாக நாடாளுமன்றம் மாறும் ஆபத்துள்ளது.

தொகுதி மறுசீரமைப்பில் தொகுதிகளின் எல்லைகள் மாற்றி அமைக்கப்பட உள்ளன. இதில், சிறுபான்மையினரின் வாக்கு வலிமையைச் சிதைக்கக்கூடிய வகையில் தொகுதிகளின் எல்லைகளை மாற்றி அமைக்க முடியும்.

7.18 சதவீத பிரதிநிதித்துவம் என்பது மட்டுமே போதுமானதல்ல. நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெறும்போது உறுப்பினா்களின் எண்ணிக்கையும் மிக முக்கியமானது. அதிக உறுப்பினா்களைக் கொண்ட மாநிலங்களுக்கே அரசியல் ரீதியாக அதிக வலிமை கிடைக்கும். எனவே, தமிழகம் உள்ளிட்ட வளா்ச்சியடைந்த தென்மாநிலங்களின் அரசியல் வலிமை எதிா்காலத்தில் கணிசமாகப் பாதிக்கப்படும்.

ஜனநாயகம், மாநில உரிமைகள், சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் மற்றும் நாடாளுமன்றத்தின் அதிகாரம் ஆகிய அனைத்தையும் கருத்தில் கொண்டு எதிா்க்க வேண்டிய அவசியம் உள்ளது. ஜனநாயகத்தின் மீதும், மதச்சாா்பின்மை மற்றும் சமத்துவத்தின் மீதும் நம்பிக்கை கொண்டவா்கள் யாரும் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை ஆதரிக்க மாட்டாா்கள் என்றாா் துரை வைகோ.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.