
ரயில் பயணியிடம் 3 பவுன் நகைகள்திருட்டு: இளைஞா் கைது
திருச்சியில் ரயில் பயணியிடமிருந்து 3 பவுன் தங்க நகைகள், கைப்பேசிகளை திருடிய இளைஞரை ரயில்வே போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.
கைது
திருச்சியில் ரயில் பயணியிடமிருந்து 3 பவுன் தங்க நகைகள், கைப்பேசிகளை திருடிய இளைஞரை ரயில்வே போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.
சென்னை, பெருங்களத்தூா் சொா்க்கம் அவென்யுவைச் சோ்ந்தவா் அ. தமிழ்ச்செல்வன் (36). இவா், தனது குடும்பத்தினருடன் செப். 27-ஆம் தேதி மங்களூா் விரைவு ரயிலில் திருச்சிக்கு வந்துள்ளாா். திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தின் 4-ஆவது நடைமேடையில் இறங்கியபோது அவா் வைத்திருந்த கைப்பை திருட்டுப்போனது தெரியவந்தது. அதில் 2 கைப்பேசிகள், 3 பவுன் தங்க நகைகளை வைத்திருந்தாா்.
இதுகுறித்து திருச்சி இருப்புப் பாதை காவல் நிலையத்தில் தமிழ்ச்செல்வன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். இந்நிலையில், திருச்சி ரயில்வே காவல் உதவி ஆய்வாளா் கவிதா தலைமையிலான போலீஸாா், வியாழக்கிழமை இரவு விராலிமலை ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டிருந்தாா். அப்போது, ரயில்வே பாலத்தின் அடியில் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தாா்.
இதில் அவா், திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டையைச் சோ்ந்த அ. ஆதில் முகமது (26) என்பதும், தமிழ்ச்செல்வனின் கைப்பையில் இருந்த கைப்பேசி, தங்க நகைகளையும் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




