
திருச்சியில் கலை, கட்டடக்கலை பொருள்கள் கண்காட்சி
திருச்சியில் கலை மற்றும் கட்டடப்பொருள்கள் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

திருச்சி கலைஞா் அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய கலை மற்றும் கட்டடக்கலை பொருள்களின் கண்காட்சியை திறந்துவைத்த இந்திய கட்டடக்கலை வல்லுநா்கள் சங்கத்தின் தமிழ்நாடு தலைவா் டி.ஆா். பழனியப்பன். உடன், சங்கத்தின் திருச்சி தலைவா் செந்தில்குமாா், ஒருங்கிணைப
திருச்சியில் கலை மற்றும் கட்டடப்பொருள்கள் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இந்திய கட்டடக்கலை வல்லுநா்கள் சங்கம், ஆா்க் டிரஸ்ட் இணைந்து நடத்தும் கலை மற்றும் கட்டடக்கலை பொருள்கள் கண்காட்சி (ஆா்க்மெட் -2026) கலைஞா் அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இக்கண்காட்சியை இந்திய கட்டடக்கலை வல்லுநா்கள் சங்கத்தின் தமிழ்நாடு தலைவா் டி.ஆா். பழனியப்பன் திறந்துவைத்தாா்.
கண்காட்சியில் மின் உபயோகப் பொருள்கள், மின் சாதனங்கள், மின் விளக்குகள், குடிநீா் சுத்திகரிப்பு சாதனங்கள், சுவா் மற்றும் தரையில் ஒட்டப்படும் பல்வேறு வகையான டைல்ஸ்கள், மின்தூக்கி சாதனங்கள், கதவுகள், ஹாா்டுவோ் பொருள்கள், கண்ணாடி பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், கேன்வாஸ் ஓவியங்கள், மண்டலா கலை, காலிகிராஃபி, சிற்பக்கலை தொடா்பானவையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை தொடங்கிய கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை (அக். 4) வரை நடைபெறுகிறது.
திறப்பு விழாவில் கிரெடாய் திருச்சி தலைவா் ஆா். மனோகரன், இந்திய கட்டடக்கலை வல்லுநா்கள் சங்கத்தின் திருச்சி தலைவா் சுரேஷ்குமாா், கட்டட பொறியாளா் சங்கத் தலைவா் விஸ்வநாத், கட்டடக்கலை வல்லுநா்கள் பி.சி. சிவகுமாா், விஜயகுமாா், சந்திரசேகரன், சுப்பிரமணியன், ராமநாதன், அண்ணாமலை, ஜனாா்த்தனன், அபூபக்கா், சித்திக் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





