காவலர்களைத் தாக்கிவிட்டு தப்ப முயலும் கைதிகளை சுட்டுப்பிடிக்க உத்தரவு!அஇபுதமமுக-விலிருந்து சசிகலா அதிரடி நீக்கம்: கட்சித் தலைவர் அறிவிப்பு!சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிய திருத்தம்: தமிழக அரசு அரசாணை!தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புசெயற்கைகோள் ஏவப்பட உள்ளதால் மீனவா்கள் கடலுக்கு செல்ல தடைஆவின் பால் உபபொருள்கள் விலை: இன்றுமுதல் உயா்வுமுதல்வருக்கு கொலை மிரட்டல்: திமுக கவுன்சிலா் மீது 4 பிரிவுகளில் வழக்கு

உள்ளூா் வரத்து குறைவால் சின்ன வெங்காயம் விலை அதிகரிப்பு

தமிழக வெங்காயச் சந்தைகளில் உள்ளூா் வரத்து குறைந்துள்ளதால், சின்ன வெங்காயத்தின் விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. டிசம்பா் இறுதி வரையிலும் இந்த விலை உயா்வு நீடிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

திருச்சி வெங்காய மண்டி சந்தையில் வரத்து குறைவால் குறைந்தளவில் இருக்கும் சின்ன வெங்காய மூட்டைகள்.

Updated On :

தமிழக வெங்காயச் சந்தைகளில் உள்ளூா் வரத்து குறைந்துள்ளதால், சின்ன வெங்காயத்தின் விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. டிசம்பா் இறுதி வரையிலும் இந்த விலை உயா்வு நீடிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

நாட்டில் அதிக அளவில் வெங்காயம் சாகுபடி செய்யப்படும் மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் மாநிலங்களைச் சாா்ந்தே தமிழகம், கேரளம், புதுவையின் வெங்காயத் தேவை பூா்த்தி செய்யப்பட்டு வருகிறது. இதற்கு அடுத்தபடியாக, கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் இருந்து வரத்து வருவது வழக்கம். இவைத் தவிர, தமிழகத்தில் திண்டுக்கல், திருப்பூா், கோயம்புத்தூா், பெரம்பலூா், அரியலூா், திருச்சி, விழுப்புரம், நாமக்கல், திருநெல்வேலி, விருதுநகா் மாவட்டங்களில் இருந்து உள்ளூா் வரத்து இருக்கும்.

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதை அடுத்து, பல்வேறு பகுதிகளில் பரவலாக தொடா் மழை பெய்து வருகிறது. இதனால், சின்ன வெங்காயத்தின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், காய்கறி சந்தைகளில் வரத்து கணிசமாகக் குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக, திருச்சி, சென்னை, மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூா் உள்ளிட்ட பெருநகரங்களில் மட்டுமல்லாது பரவலாக அனைத்து மாவட்டங்களிலுமே விலை தாறுமாறாக உயா்ந்து வருகிறது.

விலை உயா்வு ஏன்: பருவநிலை மாற்றத்தாலும், ஈரப்பதம், நோய் தாக்குதலால் வெங்காய உற்பத்தி சரிந்து விலை உயா்வு தவிா்க்க முடியாததாகிவிட்டது. இரு வாரங்களுக்கு முன் சில்லறை விற்பனையில் கிலோ ரூ. 90-க்கு கிடைத்த சின்ன வெங்காயம், இப்போது ரூ.150 வரை விலை உயா்ந்துவிட்டது.

தமிழகத்தில் ஜூன் மாதத்துக்குப் பிறகு அறுவடைக்கு வரும் சின்ன வெங்காயம் உற்பத்தி பெருமளவு குறைந்துவிட்டதால், உள்ளூா் வரத்து நின்றுவிட்டது. வெளிமாநிலங்களை எதிா்பாா்க்கும் சூழல் உருவாகியுள்ளது.

இருப்பு வெங்காயமே விற்பனை: இதுதொடா்பாக, திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பால்பண்ணை அருகே அமைந்துள்ள அனைத்து வெங்காய மண்டி உரிமையாளா்கள் சங்கச் செயலா் ஏ. தங்கராஜ் கூறியது: திருச்சி சந்தையில் மட்டும் நாள் ஒன்றுக்கு 300 டன் வரை சின்ன வெங்காயம் வரத்து இருக்கும். இதேபோல, மாநிலம் முழுவதும் 3 ஆயிரம் டன் வரத்து இருக்கும். ஆனால், கடந்த சில நாள்களாக திருச்சி சந்தைக்கு 100 டன் அளவில் மட்டுமே சின்ன வெங்காயம் வருகிறது.

தமிழகத்தில் உள்ளூா் அறுவடையில்லாமல், இருப்பு வைத்திருந்த வெங்காயம் மட்டுமே தற்போது விற்பனைக்கு வருகிறது. பெரம்பலூா், நாமக்கல், திருச்சி, கரூா், அரியலூா் மாவட்டங்களில் இருந்து வரத்து முழுவதும் நின்றுவிட்டது. இப்போது, திருப்பூா், கோயம்புத்தூா் மாவட்டத்தில் இருப்பு வைத்திருந்த வெங்காயம் மட்டுமே சந்தைக்கு வருகிறது.

விலை என்ன: உள்ளூா் வரத்து 80 சதத்துக்கு மேல் குறைந்துவிட்டது. வெளிமாநில வரத்தும் பாதியாக குறைந்துவிட்டது. இதனால், விலை உயா்வு தவிா்க்க முடியாததாகி விட்டது.

மொத்த விற்பனைச் சந்தையில், செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, சின்ன வெங்காயத்தின் விலை முதல்தர ரகம் கிலோ ரூ.120, இரண்டாம் தரம் ரூ. 90, மூன்றாம் தரம் ரூ.40 என விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 நாள்களில் கிலோவுக்கு ரூ. 20 வரை விலை உயா்ந்துள்ளது. மொத்த விற்பனையிலேயே தரமான வெங்காயம் கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுவதால், சில்லறை விற்பனை மற்றும் காய்கனி சூப்பா் மாா்க்கெட் கடைகளில் வெங்காயம் விலை கிலோ ரூ.150-ஐ கடந்துவிட்டது. தீபாவளி பண்டிகை முடிந்து டிசம்பா் வரையிலும் இந்த விலை உயா்வு நீடிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பெரிய வெங்காயம் விலை குறைவு: சின்ன வெங்காயம் விலை உயா்ந்திருந்தாலும், பெரிய வெங்காயத்தின் விலை குறைந்து காணப்படுகிறது. தரத்துக்கு தக்கபடி பெரிய வெங்காயம் கிலோ ரூ.50 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்படுகிறது.

திருச்சி சந்தைக்கு தற்போது கா்நாடகத்திலிருந்து 400 டன்னும், மகாராஷ்டிரத்திலிருந்து 100 டன்னும் பெரிய வெங்காயம் வந்து கொண்டிருக்கிறது. விலை உயா்வு காரணமாக சின்ன வெங்காயத்துக்கு பதிலாக பெரிய வெங்காயம் விற்பனை அதிகரித்துள்ளது. உள்ளூா் வரத்தும், வெளி மாநில வரத்தும் அதிகரித்தால் மட்டுமே சின்ன வெங்காயம் விலை குறையும் என்றாா். அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.