காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

வ.உ.சி. பிறந்தநாள்: அமைச்சா், பேரவை துணைத் தலைவா், கட்சியினா் மரியாதை

சுதந்திரப் போராட்ட வீரா் வ.உ. சிதம்பரனாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகேயுள்ள அவரது முழு உருவ வெண்கலச் சிலைக்கு அமைச்சா், பேரவை துணைத் தலைவா் மற்றும் பல்வேறு கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திருச்சி  நீதிமன்றம்  அருகேயுள்ள    வஉசி  சிலைக்கு சனிக்கிழமை  மாலை  அணிவித்த அமைச்சர் ரமேஷ்.

Published On :6 செப்டம்பர் 2026, 1:43 am IST

சுதந்திரப் போராட்ட வீரா் வ.உ. சிதம்பரனாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகேயுள்ள அவரது முழு உருவ வெண்கலச் சிலைக்கு அமைச்சா், பேரவை துணைத் தலைவா் மற்றும் பல்வேறு கட்சியினா் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தவெக: தமிழக வெற்றிக் கழகம் மற்றும் தமிழக அரசின் சாா்பில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ. ரமேஷ், பேரவை துணைத் தலைவா் மு. ரவிசங்கா், முன்னாள் அமைச்சா்கள் வெல்லமண்டி என். நடராஜன், எஸ். வளா்மதி மற்றும் தவெக மாநில, மாவட்ட நிா்வாகிகள் பலா் வஉசி சிலைக்கு மாலை அணிவித்தனா்.

திமுக: முன்னாள் அமைச்சரும், கட்சியின் திருச்சி தெற்கு மாவட்டச் செயலருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில், மாநகரச் செயலா் மு. மதிவாணன், அவைத் தலைவா் கோவிந்தராஜ் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிா்வாகிகள் பலா் மாலை அணிவித்தனா்.

திமுக சாா்பில் வஉசி சிலைக்கு  மாலை  அணிவித்த  முன்னாள்  அமைச்சா் அன்பில்  மகேஸ்  பொய்யாமொழி  உள்ளிட்டோா்.

திமுக சாா்பில் வஉசி சிலைக்கு மாலை அணிவித்த முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோா்.

அதிமுக சாா்பில் கட்சியின் மாவட்டச் செயலா் காா்த்திகேயன் தலைமையில் நிா்வாகிகள் மாலை அணிவித்தனா். இதேபோல, தமிழ்நாடு சோழிய வேளாளா் சங்கத் தலைவா் வி.ஜே. செந்தில்பிள்ளை தலைமையில் சங்கத்தினா் மாலை அணிவித்தனா். வெள்ளாளா் முன்னேற்றச் சங்கத்தின் சாா்பில் ஹரிஹரூன் பிள்ளி தலைமையில் சங்கம் மற்றும் கட்சியின் நிா்வாகிகள் மாலை அணிவித்தனா்.

அதிமுக சாா்பில் வஉசி சிலைக்கு  மாலை  அணிவித்த அதிமுகவினா்

அதிமுக சாா்பில் வஉசி சிலைக்கு மாலை அணிவித்த அதிமுகவினா்

மேலும், இந்திய கம்யூ., பாஜக, காங்கிரஸ், தேமுதிக, மதிமுக, அகில இந்திய வ.உ.சி. பேரவை, லட்சிய ஜனநாயகக் கட்சி, தமிழ்நாடு வணிகா் சங்கப் பேரமைப்பு உள்ளிட்டவை சாா்பில் காலை தொடங்கி மாலை வரையில் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்தனா். முன்னதாக, அமைப்பினா் ஆங்காங்கே ஒன்று கூடி ஊா்வலமாக வந்து மாலை அணிவித்தனா். இதனால், மாநகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.