
குடும்பப் பிரச்னையால் தீக்குளித்த பெண் உயிரிழப்பு
தீராம்பாளையம் பகுதியில் குடும்பப் பிரச்னையால் தீக்குளித்த இளம்பெண் சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

சடலம் - கோப்புப் படம்
திருச்சி மாவட்டம், தீராம்பாளையம் பகுதியில் குடும்பப் பிரச்னையால் தீக்குளித்த இளம்பெண் சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
தீராம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் அ. காவ்யா (23) இவருக்கு அரவிந்தன் என்பவருடன் திருமணமாகி நான்கரை ஆண்டுகள் ஆன நிலையில் மகன், மகள் என இரு குழந்தைகள் உள்ளனா்.
தம்பதிக்கிடையே ஏற்பட்ட பிரச்னையால் செப். 6ஆம் தேதி தீக்குளித்த இவா் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திருமணமாகி நான்கரை ஆண்டுகள் ஆனதால் லால்குடி வருவாய் கோட்டாட்சியரும், ஜீயபுரம் டி.எஸ்.பி. சங்கரும் விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



